"எங்க வனி அக்கா இல்லாம ஒரு பேமிலி போட்டோவா?".. அருண் விஜயை வறுத்தெடுத்த பிக் பாஸ் வெறியர்கள்!

அருண் விஜய் வெளியிட்டுள்ள குடும்ப புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Vanitha : Family Photos : வனிதா அக்கா இல்லாத Family photo-வா- வீடியோ

சென்னை: அருண் விஜய் வெளியிட்டுள்ள குடும்ப புகைப்படத்தால், வனிதா ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். நீண்டகாலமாக அப்பாவுக்கும், மகளுக்குமான பிரச்சினை நீடித்து வருகிறது. இதனாலேயே விஜயகுமார் குடும்பத்தினர் வனிதாவிடம் இருந்து விலகியே உள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மீண்டும் பிரபலமாகி இருக்கிறார் வனிதா. சமூகவலைதளங்களில் அவருக்கென ஆர்மி கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் ரசிகர்கள்:

பிக் பாஸ் ரசிகர்கள்:

வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை அவரை வசை பாடியவர்கள் கூட, அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவருக்கு ஆதரவாளர் ஆகி விட்டனர். மீண்டும் வனிதாவை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வாருங்கள் என்ற வேண்டுகோள் உள்ளது. அவருக்கு ஆதரவாக எல்லா விசயங்களிலும் பிக் பாஸ் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சமயங்களில் பிக் பாஸ் வெறியர்களாகக் கூட அவர்களது பதிவு உள்ளது.

குடும்பப்படம்:

அந்தவகையில், தனது சகோதரிகளுடன் அருண் விஜய் வெளியிட்ட புகைப்படத்தை வைத்து செய்து வருகின்றனர் வனிதா ரசிகர்கள். சமீபத்தில் தனது சகோதரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாசமாக வெளியிட்டுள்ளார் அருண் விஜய். ஆனால், அதைப் பார்த்து வனிதா ஆர்மியினர் ஆவேசமாகி விட்டனர். காரணம் அதில் வனிதா இல்லை.

வனி அக்கா எங்கே?

இதனால் அருண் விஜய்யின் பதிவுக்கு கீழே, தொடர்ச்சியாக வனிதா பற்றியே கேள்வி எழுப்பி கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். சிலர் மீம்ஸ்கூட வெளியிட்டுள்ளனர். வனி அக்கா எங்கடா.. வனி அக்கா இல்லாம உங்கக் குடும்பப் போட்டோவா? என விதவிதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வனிதா பதில்:

ரசிகர்களின் இந்தப் பதிவுகளைப் பார்த்து வனிதாவும் எமோசனல் ஆகிவிட்டார். ‘நீங்களாவது இந்த குடும்ப புகைப்படத்தில் நான் இல்லை என கவலைப் பட்டுள்ளீர்களே. எனது டிவிட்டர் குடும்பத்தினர்களுக்கு ரொம்ப நன்றி' என அவர் கமெண்ட் வெளியிட்டுள்ளார்.

நல்ல மனசு:

மற்றொரு பதிவில், ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு.. வனிதா அக்காவை சேர்த்துக்காத நீங்க ஃபூல்' என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள வனிதா, ‘ஓ மை காட்.. அவங்க நல்லா இருக்கட்டும்' என பதிலளித்துள்ளார்.

விஜய் நாயகி:

விஜய் நாயகி:

விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் வனிதா. அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த வனிதா, கல்யாணம் ஆகி, சினிமாவில் இருந்து விலகினார். ஆனால் அவரது மண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையால், தற்போது தயாரிப்பாளராக இருந்து வருகிறார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X