அவதூறு பரப்புகிறார்கள்.. கஸ்தூரி உட்பட 3 பேர் மீது போலீஸில் வனிதா புகார்.. பரபரக்கும் கோலிவுட்!

சென்னை: தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது நடிகை வனிதா போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நடிகை வனிதா கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தனது கணவரை மீட்டு தருமாறு போலீஸில் புகார் அளித்தார்.

இதனால் இந்தப் பிரச்சனை பெரும் பூதாகரமானது. பலரும் வனிதாவின் திருமணம் குறித்து விமர்சித்தனர்.

ஏற்கனவே புகார்

ஏற்கனவே புகார்

குறிப்பாக யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி, வனிதாவை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். தயாரிப்பாளர் ரவீந்தர் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் கடுப்பான வனிதா, சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது போலீஸில் புகார் அளித்தார்.

இழிவான வார்த்தைகள்

இழிவான வார்த்தைகள்

இதனை தொடர்ந்து ஊடகம் ஒன்றில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் நேர்க்காணலில் பங்கேற்றார். அப்போது எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக எப்படி பேசலாம் என லக்ஷ்மி ராமகிருஷ்ணனை விளாசினார். இழிவான வார்த்தைகளால் படு மோசமாக பேசினார் வனிதா.

விலகிய வனிதா

விலகிய வனிதா

அந்த வீடியோக்கள் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகை வனிதா, கஸ்தூரி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வனிதா டிவிட்டரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.

வனிதா புகார்

வனிதா புகார்

இந்நிலையில் நடிககைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கஸ்தூரி மற்றும் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் வனிதா. இவர்கள் மூவரும் தன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் வனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X