என்ன.. பிக்பாஸ் வனிதா அக்காவுக்கு மூன்றாவது கல்யாணமா? தீயாய் பரவும் பத்திரிகை!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமாருக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் பத்திரிகை பரபரப்பை கிளப்பியுள்ளது.

Recommended Video

Vanitha Vijaykumar -க்கு மூன்றாவது திருமணம் | Peter Paul

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் என்றால் அது வனிதாதான். வனிதா இல்லாமல் இருந்திருந்தால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது.

வனிதா இருந்த வரை பிக்பாஸ் வீடு சண்டையும் சச்சரவுமாக போர்க்களம் போல் காணப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் வனிதா செய்த அட்டகாசங்களை பொறுக்க முடியாத மக்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர்.

பிபி எகிறியது

பிபி எகிறியது

இங்கு சொல்வதை அங்கும், அங்கு சொல்வதை இங்கும் என சண்டை மூட்டிவிட்டு வந்தார். மூத்தவர்கள் என்றும் பார்க்காமல் வாயால் அடித்து வந்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு பிபி எகிறயது. பலரும் கடுமையாக அவரை சமூக வலைதளங்களில் விளாசித் தள்ளினர்.

முதல் முறையிலேயே..

முதல் முறையிலேயே..

வனிதாவை எப்படியாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து முதல் முறையாக நாமினேஷனுக்கு வந்த வனிதாவை சொல்லி வைத்தது போல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

வைல்டு கார்டு என்ட்ரி

வைல்டு கார்டு என்ட்ரி

என்னதான் வனிதா வாயால் அடித்து சண்டை போட்டாலும் அவர் இல்லாத சில வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த சுவாரசியமும் இல்லாமல் படுத்தே விட்டது. இதனால் வனிதா அக்காவை அழைத்து வாருங்கள் என்று மக்களே கெஞ்சும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரியாக்கினார் பிக்பாஸ்.

மகள்கள் வனிதாவுடன்

மகள்கள் வனிதாவுடன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த வனிதாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகன் ஸ்ரீஹரி அவரது தந்தையான நடிகர் ஆகாஷுடன் வசித்து வருகிறார். ஆனால் இரண்டு மகள்களும் வனிதாவுடன்தான் வசித்து வருகின்றனர்.

நடன இயக்குநர் ராபர்ட்

நடன இயக்குநர் ராபர்ட்

இரண்டு கணவர்களை விவாகரத்து செய்த வனிதா, நடன இயக்குநர் ராபர்ட்டை காதலித்தார். அவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. இருவரும் சேர்ந்து படத்தைக் கூட தயாரித்தனர். ஆனால் அதன்பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். வனிதா தனது அப்பாவான விஜயக்குமார், அண்ணன் அருண்விஜய் மற்றும் சகோதரிகளுடனும் சண்டை போட்டார்.

மூன்றாவது திருமணம்?

மூன்றாவது திருமணம்?

இதனால் குடும்பத்தினருடன் ஒட்டு உறவு இல்லாமல் உள்ளார். அண்மையில் அவரது மகள் வயதுக்கு வந்த போது கூட நடிகர் சேரன்தான் மாமா முறையில் சீர் செய்தார். அந்த போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உறுப்படுத்தவில்லை..

உறுப்படுத்தவில்லை..

இதுதொடர்பாக ஒரு பத்திரிகையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பீட்டர் பால் என்பவருடன் வனிதாவுக்கு வரும் 27ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து வனிதா தரப்பில் இருந்து எந்த தவலும் இல்லை. இந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்து வனிதா விஜயகுமார் தானா என்ற தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X