வனிதா கொலை மிரட்டல் விடுக்கிறார்.. மூன்றாவது கணவரின் முதல் மனைவி பரபர குற்றச்சாட்டு!

சென்னை: தனது கணவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Vanitha Vs Lakshmi • ஒரு பெண்ணோடு வாழ்க போச்சு

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27ஆம் தேதியான சனிக்கிழமை மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார். தனது காதலரான பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து கொண்டார்.

வனிதாவின் மகளே அவருக்கு மணப்பெண் தோழியாக பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தார். அவரது திருமண போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது.

மீண்டும் லிப்லாக்

மீண்டும் லிப்லாக்

குறிப்பாக அவரது லிப்லாக் முத்தம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. வயதுக்கு வந்த மகள்கள் முன்பு எப்படி உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்தார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். அவர்களை வெறுப்பேற்றும் விதமாக மீண்டும் லிப் லாக் போட்டோவை ஷேர் செய்தார் வனிதா.

முதல் மனைவி புகார்

முதல் மனைவி புகார்

வனிதா திருமணம் செய்த இரண்டாவது நாளிலேயே பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வடபழனி போலீஸில் புகார் அளித்தார். அதில் தனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.

வனிதாவுடன் திருமணம்

வனிதாவுடன் திருமணம்

தாங்கள் இதுவரை விவாகரத்து செய்து கொள்ளவில்லை. தன்னை விவாகரத்து செய்யாமலேயே தனது கணவரான பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என கூறியுள்ளார். மேலும் முறையாக விவாகரத்து பெற்ற பிறகே வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொள்வேன் என்று பீட்டர் பால் தன்னிடம் கூறியதாகவும் ஹெலன் தெரிவித்தார்.

வனிதாவின் கட்டுப்பாட்டில்

வனிதாவின் கட்டுப்பாட்டில்

ஆனால் விவாகரத்து பெறாமேலேயே பீட்டர் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பீட்டர் பால் வனிதாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவரது பேச்சை கேட்டு தன்னை விவாகரத்து செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார்.

வனிதா கொலை மிரட்டல்

வனிதா கொலை மிரட்டல்

மேலும் வனிதாவும் பீட்டர் பாலும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார் ஹெலன். இதனிடையே தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில், குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் ஹெலன் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக நடிகை வனிதா குற்றம்சாட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X