ஆல் இஸ் வெல்.. வீட்டுக்கு வந்தாச்சு.. வனிதா சொன்ன ஹேப்பி நியூஸ்.. கடவுளுக்கு நன்றி சொன்ன ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

Vanitha விடம் மன்னிப்பு கேட்ட KPY Nanjil Vijayan

நடிகை வனிதாவின் கணவரான பீட்டர் பால் நேற்று முன் தினம் இரவு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இதனைக் கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பீட்டர் பாலுக்கு என்ன ஆனது? என நலம் விசாரித்து வந்தனர்.

அற்புதம் நடக்கும்

அற்புதம் நடக்கும்

இதனால் நெகிழ்ந்து போன நடிகை வனிதா, தன் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி, நிச்சயம் இந்த கடுமையான காலத்தை கடந்து வந்துவிடுவேன். கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் அற்புதம் நடக்கும், பீட்டர் பாலை மீட்டு கொண்டு வருவேன் என உருக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

விளையாடுகிறார்

விளையாடுகிறார்

அதனை தொடர்ந்து டிவிட்டரிலும் வாழ்கையை கணிக்க முடியாது. யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்றும் உருக்கமாக டிவிட்டியிருந்தார். கடவுளுக்கு என்டெர்டெய்ன்மென்ட் தேவை படுகிறது. அதனால்தான் என்னோடு விளையாடுகிறார் என்றும் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

தைரியமாக இருங்கள்

தைரியமாக இருங்கள்

அதனை பார்த்த ரசிகர்கள் பீட்டர் பால் விரைவில் குணமடைந்து விடுவார் கவலைப்படாதீர்கள், எப்போதும் போல துணிச்சலான பெண்ணாக, தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறி வந்தனர். மேலும் பலர் பீட்டர் பாலின் உடல் நிலை குறித்து அவ்வப்போது தெரியப்படுத்துங்கள் என்றும் கூறினர்.

ஆல் இஸ் வெல்

ஆல் இஸ் வெல்

இந்நிலையில் நடிகை வனிதாவின் டிவிட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதாவது ஆல் இஸ் வெல்.. வீட்டுக்கு வந்தாச்சு என டிவிட்டியுள்ளார் வனிதா. அதனை பார்த்த ரசிகர்கள், உங்களின் கணவர் பீட்டர் பாலை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டீற்களா, என கேட்டு கடவுளுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X