சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி.. நடிகர் நாஞ்சில் பிஜிலி கூட தொடர்பு இருக்கு.. வனிதா வக்கீல் அதிரடி!
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமாரின் வழக்கறிஞர் யூட்யூப் பிரபலமான சூர்யா தேவி குறித்த அதிர வைக்கும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்த நாள் முதலே பிரச்சனைதான். வனிதா திருமணம் செய்த பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
மனைவியை விவாகரத்து செய்யாமலேயே அவர் இரண்டாவது திருமணம் செய்ததால் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் போலீஸில் புகார் அளித்தார்.

வாங்கிக்கட்டினர்
இதனால் வனிதாவின் திருமணம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. சமூக வலைதளங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டிபத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்டோரும் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்து வாங்கிக்கட்டினர்.

வனிதா மன்னிப்பு கேட்கனும்
இதில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டிபத்மினி ஆகியோர் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் ரவீந்திரன் மன்னிப்பு கேட்க முடியாது, என்னை பாடி ஷேமிங் செய்த நடிகை வனிதாதான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதனால் இருவருக்கும் இடையிலான வார்த்தை போர் அதிகரித்து வந்தது.

ஏற்கனவே புகார்
இந்நிலையில் யூட்யூப் பிரபலமான சூர்யா தேவியும் நடிகை வனிதாவை கடுமையாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டார். இதுதொடர்பாக கடந்த 7ஆம் தேதி சூர்யா தேவி மீது போரூர் காவல்நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். இருப்பினும் சூர்யா தேவி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்ட நிலையில் நேற்று மீண்டும் போலீஸில் புகார் அளித்தார் வனிதா.

கண்ணீர்விட்ட வனிதா
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சூர்யா தேவியும் தயாரிப்பாளர் ரவீந்திரனும் தன்னைப்பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தெரிவித்தார். அதோடு ஃபேமிலி சப்போர்ட் எதுவும் இல்லாமல் தனியாக இருப்பதால் துணை வேண்டும் என்றும் கண்ணீர் விட்டார் வனிதா.

ஆபாச பேச்சு
வனிதாவை தொடர்ந்து பேசிய அவரது வழக்கறிஞர் ஸ்ரீதர், இந்த சைபர் புல்லிங் என்பது நேரில் வந்து பேச தைரியம் இல்லாதவர்கள் போனை வைத்துக்கொண்டு செய்யும் வேலை. மதுரையிலேருந்து வந்த எந்த பெண்ணும் அருவருக்கதக்க வகையில் இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை பேச மாட்டார்.

கஞ்சா வியாபாரி
சூர்யா தேவி கஞ்சா ஒரு வியாபாரி. ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. ஏற்கனவே அரசியல்வாதி ஒருவரை சைபர் புல்லிங் செய்தார். பின்ர் நடிகை, மாடல், லாயர் என என்னையும் எனது குடும்பத்தையும் இழுத்து பேசுகிறார். அவர் கஞ்சா விற்கும் தொழிலுக்கு விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் பிஜிலி கூட்டாளி.

கொஞ்சும் வீடியோ
அவர்கள் இருவரும் சேர்ந்து பேசிய வாய்ஸ் என்னிடம் உள்ளது. அதில் வனிதாவை பற்றி பேசியதால் ஒரே நாளில் 3 லட்சம் சப்ஸ்க்ரைப்பர்கள் வந்துவிட்டதாக அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோவும் இருவரும் கொஞ்சிக் கொள்ளும் வீடியோவும் உள்ளது. வனிதா திருமணத்தால் ஒரு குடும்பம் நாசமானதாக சூர்யா தேவி பேசுகிறார். அவர் கஞ்சாவிற்பதால் பல குடும்பங்கள் நாசமாகிறது.

ஆதாரங்கள் வெளியீடு
அவர் வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் அதற்கான ஆதாரம் இருக்கு. உயிருக்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். அவர் பப்சிளிட்டிக்காக பேசுகிறார் என்று கூறி சூர்யா தேவி தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார் வனிதாவின் வழக்கறிஞர்.

கொஞ்சி விளையாடுகிறார்
அதில், சூர்யாதேவியிடம் ஒருவர் கஞ்சா கேட்க, அவர் தனது தம்பியிடம் இருப்பதாகவும், அவனிடம் பேசிவிட்டு கால் செய்கிறேன் எனவும் சொல்கிறார் சூர்யா தேவி. மேலும் கலாச்சாரத்தை பற்றி பேசும் சூர்யா தேவி பல ஆண்களுடன் கொஞ்சி விளையாடுகிறார் என்றும் சில டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டார்.


Click it and Unblock the Notifications











