கணவருடன் மீண்டும் லிப்லாக்: படுக்கையறை போட்டோவை பப்ளிக்கில் போட்ட வனிதா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் தனது கணவருடன் படுக்கையறையில் எடுத்த லிப்லாக் செல்பியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

'என் வாழ்க்கை இனி சந்தோஷமா வாழ்ந்து காமிப்பேன்'

ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தானவர் நடிகை வனிதா விஜயக்குமார். முதல் கணவருடன் ஒரு மகன், ஒரு மகளும் இரண்டாவது கணவருடன் ஒரு மகளும் உள்ளனர்.

19 வயதான மகன் தனது தந்தையுடன் வசித்து வரும் நிலையில் நடிகை வனிதா தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

மூன்றாம் திருமணம்

மூன்றாம் திருமணம்

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தனது பெற்றோரின் திருமண நாளிலேயே மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார் வனிதா. பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை அவர் திருமணம் முடித்தார். கிறிஸ்தவ முறைப்படி வீட்டில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.

விளாசல்

விளாசல்

திருமணத்தின் போது வனிதாவும் அவரது கணவர் பீட்டர் பாலும் லிப்லாக் கொடுத்துக் கொண்டனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. வயதுக்கு வந்த மகளை வைத்துக்கொண்டு 40 வயதில் இப்படி லிப்லாக் கொடுப்பதெல்லாம் ஓவர் என பலரும் விளாசி தள்ளினர்.

படுக்கையில் நெருக்கம்

படுக்கையில் நெருக்கம்

அவர் லிப்லாக் போட்டோக்கள் வைரலாகி பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் விமர்சித்தவர்களை வெறுப்பேற்றும் வகையில் நடிகை வனிதா விஜயக்குமார் தனது கணவருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். கணவருக்கு லிப் லாக் கொடுத்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

படுக்கையில் வைத்துக்கொள்ளுங்கள்

படுக்கையில் வைத்துக்கொள்ளுங்கள்

அந்த போட்டோவுக்கு ரொமான்ஸ் தெரியாதவர்களுக்கு அதிக முத்தங்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர். வனிதாவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், இதையெல்லாம் உங்கள் படுக்கையறைக்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மகளுக்கு தவறான ரோல் மாடலாக உள்ளீர்கள் என்று சாடியிருக்கிறார்.

கருமம் கன்றாவி

கருமம் கன்றாவி

மற்றொரு நெட்டிசன் இதுபோன்ற போட்டோக்களை தயவு செய்து ஷேர் செய்யாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். பலரும் இதுபோன்ற அந்தரங்க போட்டோக்களையெல்லாம் ஏன் ஷேர் செய்கிறீர்கள் என்றும் கேட்டும் விளாசி வருகின்றனர். பலரும் கருமம் கன்றாவி.. பார்க்க முடியலடா என தெரிவித்து வருகின்றனர்.

எரிச்சலா இருக்கு

எரிச்சலா இருக்கு

மேலும் சிலர் உங்களின் மகள்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்தாவது இதுபோன்ற போட்டோக்களை ஷேர் செய்யாமல் இருங்கள் என கூறியுள்ளனர். இதுபோன்ற போட்டோக்களை ஷேர் செய்து உங்களின் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள் என்றும், இதை பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X