நீ ஒன்னும் என் பாஸோ முதலாளியோ இல்ல.. குக்கிங் படித்ததற்கான புரூஃபை கேட்ட நெட்டிசனிடம் சீறிய வனிதா!

சென்னை: குக்கிங் படித்ததற்கான புரூஃபை கேட்ட நெட்டிசனை நடிகை வனிதா வெளுத்து வாங்கியுள்ளார்.

Recommended Video

Vanitha கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது? மறுப்பு தெரிவித்த NanjilVijayan

ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை வனிதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டக் கோழியாக வலம் வந்த நடிகை வனிதா சமூக வலைதளங்களில் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

பயன்படுத்திக்கொண்ட வனிதா

பயன்படுத்திக்கொண்ட வனிதா

இருந்தப்போதும் அவரால்தான் நிகழ்ச்சி சுவாரசியமாக இருப்பதாக கருதிய விஜய் டிவி, மக்களால் வனிதா வெளியேற்றப்பட்ட பிறகும் வைல்ட் கார்டு வாய்ப்பை கொடுத்து அவரை மீண்டும் அழைத்து வந்தது. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார் வனிதா.

புதுபுது ரெசிப்பிக்கள்

புதுபுது ரெசிப்பிக்கள்

இதன் பலனாக சில சீரியல்களில் கெஸ்ட் அப்பீயரன்ஸ் கொடுத்தார். பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் டைட்டில் வின்னரான நடிகை வனிதா, யூ ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அதில் புதுபுது ரெசிப்பிக்களை செய்துக் காட்டி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.

குவியும் வியூஸ்

குவியும் வியூஸ்

அதோடு தனது யூ டியூப் சேனலில் தன்னுடைய கணவர் பீட்டர் பாலுடனான நேர்க்காணல், தனது திருமணம், மேக்கப் என எதையெல்லாம் போஸ்ட் செய்தால் வரவேற்பு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு வேலை பார்த்து வருகிறார் வனிதா. அதற்கேற்றார் போல் அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு வீடியோவும் வியூஸ்களை குவித்து வருகிறது.

கமெண்ட்ஸ்களுக்கு பதில்

கமெண்ட்ஸ்களுக்கு பதில்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை வனிதா, தனது ரெசிப்பிக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் ஷேர் செய்து வருகிறார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்களுக்கும் பதில் கூறி வருகிறார்.

புரூஃப் தேவை?

புரூஃப் தேவை?

அந்த வகையில் வனிதாவின் ரசிகர் ஒருவர் நீங்கள் என்ன குக்கிங் கோர்ஸ் படித்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு பேஸ்ட்ரி பேக்கிங் மற்றம் செஃபிங் முடித்துள்ளதாக கூறினார் வனிதா. இதனை பார்த்த மற்றொரு ரசிகர், புரூஃபை காட்டுங்கள், புரூஃப் இல்லாமல் நான் கூட ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் டாக்ட்ரேட் முடித்ததாக சொல்லுவேன்.. புரூஃப் தேவை என்றார்.

நீ என் பாஸ் இல்ல

நீ என் பாஸ் இல்ல

இதனை பார்த்து கடுப்பான வனிதா, யாருக்கும் யாரும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ என் பாஸோ அல்லது முதலாளியோ இல்லை.. நான்தான் எனக்கு பாஸ்.. என்னிடம் உள்ளது என தடாலடியாக கூறி வெளுத்துவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X