நம் சிறிய குடும்பத்திற்கு வந்துள்ள பப்பாவை வரவேற்பதில் பிரமிக்கிறேன்.. வைரலாகும் வனிதா மகளின் பதிவு!

சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் நேற்று முன்தினம் மூன்றாவது திருமணம் செய்த நிலையில் புதிய அப்பாவை அவரது மகள் ஜோவிகா வரவேற்றுள்ளார்.

Recommended Video

1 கோடி கேட்ட முதல் மனைவி... வனிதா மூன்றாவது கணவருக்கு சிக்கல்

மூன்று பிள்ளைகளுக்கு தாயான வனிதா, இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் விஷ்வல் எடிட்டரான பீட்டர் பால் என்பவருடன் காதல் கொண்டார் வனிதா.

கடந்த சனிக்கிழமை கிறிஸ்தவ முறைப்படி வனிதா திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

புதிய அப்பா

புதிய அப்பா

இந்நிலையில் திருமணம் செய்த தனது அம்மாவுக்கு வாழ்த்துகூறும் வகையில் வனிதாவின் மகள் ஜோவிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே ஜோவிகா தனது அம்மாவுக்கு திருமண வாழ்த்து கூறிய நிலையில் தற்போது புதிய அப்பாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பிரமிக்கிறேன்

பிரமிக்கிறேன்

இதுதொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள பதிவில், நான் உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன், உங்களால் பெருமைப்படுகிறேன்!! மகிழ்ச்சி, சாகசம், உற்சாகம் மற்றும் உண்மையுள்ள எங்கள் சிறிய குழுவில் பப்பாவை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பிரமிக்கிறேன்!!

கண்டுபிடித்ததற்கு நன்றி

கண்டுபிடித்ததற்கு நன்றி

இறுதியாக இதனை முழுமையானதாக உணர்கிறேன், எங்கள் புதிரில் ஒரு பகுதியைக் காணவில்லை என்று எனக்குத் தெரியாது... ஆச்சரியத்தின் மறைக்கப்பட்ட மூலையில் இருந்து அதைக் கண்டுபிடித்ததற்கு நன்றி !! மேலும் ஒரு நாள் உங்களுக்கு கிடைத்திருக்கும் நண்பர்களை போன்று பெறுவேன் என்று நான் நம்புகிறேன்!!

நம் குடும்பம்

நம் குடும்பம்

நான் அவர்களை 10 ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன், நேசித்தேன், உண்மையிலேயே என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து அவர்கள் நம் குடும்பம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். யாராவது என்னிடம் "உங்கள் குடும்பத்தைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்" என்று கேட்கும் போதெல்லாம் அவர்கள் பெயர்கள் உங்களுடையதாக இருக்கும் !!

நோய் வாய்ப்படக்கூடாது

நோய் வாய்ப்படக்கூடாது

பலர் பல விஷயங்களைச் சொல்லலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள்! இது நம் வாழ்க்கை, அதை நம் வழியில் வாழப்போகிறோம்!! காதல் என்பது தொற்று.. நம் உலகம் அதனால் நிரம்பியிருக்கிறது! இதனால் தொற்று ஏற்படுவோம், ஒருபோதும் நோய்வாய்ப்படக்கூடாது !! மிக்க மகிழ்ச்சி.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

உனக்கு அப்பா இல்லை

உனக்கு அப்பா இல்லை

மகள் ஜோவிகாவின் இந்த பதிவை நடிகை வனிதா விஜயக்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஜோவிக்காவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவருக்கு வாழ்த்து சொல்லியுள்ளனர். ஆனால் பல நெட்டிசன்கள் அவர் உன் அம்மாவுக்கு கணவர், உனக்கு அப்பா இல்லை என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X