அப்படி ரொமான்ஸ் பண்ணீங்களே.. அதுக்குள்ளேயா புட்டுக்கிச்சு? வனிதாவின் திருமணங்களும் முறிவுகளும்!

சென்னை: நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணமும் முறிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Vanitha Peter Paul இடையே பிரச்சனையா! வீட்டை விட்டு சென்றாரா Peter Paul | Filmibeat tamil

நடிகர் விஜயக்குமார், நடிகை மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

டீனேஜில் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் அந்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை.

இரண்டு திருமணங்கள்

இரண்டு திருமணங்கள்

இதனை தொடர்ந்து 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா அவருடன் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளை பெற்றார். பின்னர் அவரை விவாகரத்து செய்த வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்தார்.

ராபர்ட்டுடன் டேட்டிங்

ராபர்ட்டுடன் டேட்டிங்

அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்ற வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து நடன இயக்குநர் ராபர்ட்டுன் டேட்டிங்கில் இருந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி தனது அப்பாவுடன் வசித்து வர இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார் நடிகை வனிதா. குடும்பத்தாருடன் ஏற்படும் தகராறு காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வரும் வனிதா, கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

பீட்டருடன் காதல்

பீட்டருடன் காதல்

இதனை தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வின்னரானார். தொடர்ந்து யூட்யூப் சேனல் தொடங்கினார் வனிதா. அப்போதுதான் வனிதாவுக்கு மீண்டும் காதல் மலர்ந்தது. அதாவது தனது யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் மீது காதல் கொண்டார் வனிதா.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார் வனிதா. திருமணத்தின் போது இருவரும் எடுத்துக் கொண்டப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதா. . ஆனால் பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரது முதல் மனைவி போலீஸில் புகார் அளித்தார். தனது கணவரை மீட்டுத் தருமாறு திரை பிரபலங்கள் பலரிடம் கோரிக்கை விடுத்தார்.

இளம் ஜோடிகளை போல்

இளம் ஜோடிகளை போல்

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வனிதா தனது காதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவாவுக்கு புறப்பட்டார். கோவாவில் இளம் ஜோடிகளை போல் இருவரும் லூட்டி
அடித்தனர். அந்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதா.

பீட்டர் பாலை பிரிந்தார்?

பீட்டர் பாலை பிரிந்தார்?

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் ரொமான்ஸ் தேவையா என விளாசினர். இந்நிலையில் நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்கிய வனிதா?

தாக்கிய வனிதா?

கோவாவில் இருந்து திரும்பும் போது குடிபோதையில் பீட்டர் பால் தகராறு செய்ததாகவும், பொறுத்து பொறுத்துப் பார்த்த வனிதா ஒரு கட்டத்தில் பீட்டர் பாலை காரில் இருந்து தள்ளிவிட்டு அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சென்னைக்கு வந்த வனிதா, பீட்டர் பால் தங்கியிருந்த இடத்திலும் சென்று அவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் முறிவு?

திருமணம் முறிவு?

இதனால் பீட்டர் பால் தான் வேலை பார்த்த பழைய அலுவலகத்தின் கார் பார்க்கிங்கில் சரக்கும் கையுமாக இருப்பதாக கூறப்படுகிறது. பீட்டர் பாலுக்காக பல பேரிடம் வனிதா மல்லுக்கட்டி வந்தார். கட்டிப்பிடித்தும் லிப்லாக் கொடுத்தும் பல மாதிரியான போட்டோக்களை வெளியிட்ட நிலையில் இந்த திருமணமும் முறிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரன்சி மாலையில்

கரன்சி மாலையில்

இதனை இன்னும் பீட்டர் பாலோ அல்லது வனிதாவோ உறுதிப்படுத்தாத நிலையில் இருவருக்கும் இடையிலான பிரச்சனைதான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அப்போது பீட்டர் பாலுடன் சேர்ந்து வனிதா வீட்டில் லக்ஷ்மி குபேர பூஜை நடத்தினார். மேலும் கரன்சி மாலையில் போஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X