மக்களுக்கு எதார்த்தம் புரியவில்லை.. உலகம் என்னை சாதனைகளுக்கு தயார்படுத்துகிறது.. நடிகை அடடே பேச்சு!
சென்னை: மக்களுக்கு எதார்த்தம் புரியவில்லை என்றும் இந்த உலகம் தன்னை சாதனைகளுக்கு தயார் படுத்திக் கொண்டிருப்பதாகவும் நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
Recommended Video
யார் என்ன சொன்னாலும் தான் செய்வதுதான் சரி என்ற நோக்கில் செயல்படுபவர் நடிகை வனிதா. தன்னை பற்றி யார் விமர்சித்தாலும் சரமாரியாக விளாசி தள்ளி வருகிறார்.
கடந்த சில நாட்களாக வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் பேச்சாக இருந்தது. அதன் பிறகு வனிதாவின் கணவரான பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உன் வேலைய பாரு
இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மீண்டும் ஹாட் டாப்பிக் ஆனார் வனிதா. நேற்று வனிதாவை விமர்சித்த நெட்டிசன் ஒருவரை, என் குடும்ப பிரச்சனை, நீ மூடிட்டு உன் வேலைய பாரு என்று கூறி அதிரடி காட்டினார்.

புகழ்ந்த நெட்டிசன்
இந்நிலையில் ரொம்ப சாந்தமாகவும் முதிர்ச்சியாகவும் ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். அதாவது ரசிகர் ஒருவர், நடிகை வனிதாவை அக்கா யூ ஆர் கிரேட், உங்களை போன்ற ஒரு ஸ்ட்ராங்கான பெண்ணை நாங்கள் பார்த்ததேயில்லை என புகழ்ந்தார்.

மற்ற பெண்களை பாருங்கள்
அதனை பார்த்த மற்றொரு நெட்டிசன், உலகில் குஞ்சன் சக்சேனா,கல்பனா சாவ்லா போன்று எவ்ளோவோ ஸ்ட்ராங்கான பெண்கள் உள்ளார்கள், உலக்குக்கும் மக்களுக்கும் நல்லது செய்தவர்கள். ரியல் பெண் ஹீரோக்களை அவமானப்படுத்தாதீர்கள் என்று கூறினார்.

என்னை தயார்படுத்துகிறது
அதற்கு பதிலளித்த அந்த நெட்டிசன் மீண்டும் வனிதாவுக்கு ஆதரவாக பேசினார். இதனை பார்த்த வனிதா, கவலைப்படாதீங்க.. மக்களுக்கு எதார்த்தம் புரியவில்லை, எனது பயணம் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.. இன்னும் பலவற்றை அடைய வேண்டும்.. இன்னும் வரவிருக்கும் எனது சாதனைகளுக்கு இந்த உலகம் என்னை தயார்படுத்துகிறது என தத்துவமாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











