பீட்டர் பாலுடன் மேலும் ரொமான்ஸ் போட்டோ.. இது வேற மாதிரி.. அசால்ட் பண்ணும் வனிதா!
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் தனது கணவர் பீட்டர் பாலுடன் சேர்ந்து எடுத்துள்ள மேலும் ஒரு ரொமான்டிக் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகை வனிதா கடந்த திங்கள் கிழமை தனத 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக குடும்பத்துடன் கோவா சென்றார்.
ஒரு வாரம் கோவாவில் விடுமுறையை கழித்த வனிதா, விதவிதமான கடல் உணவுகளை வெளுத்து வாங்கினார்.

கொண்டாட்டம்
அதோடு அங்கிருந்தப்படியே சில சீ ஃபுட்களை சமைப்பது குறித்து வீடியோக்களும் வெளியிட்டார். பீச்சில் ஆட்டம் ஹோட்டலில் சரக்கு பார்ட்டி என களைக்கட்டியது வனிதாவின் பிறந்த நாள். மூன்றாவது கணவரான பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் கொண்டாடி தீர்த்தார் வனிதா.

எல்லை மீறிய போட்டோஸ்
தங்களின் கொண்டாட்ட போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். சில போட்டோக்கள் எல்லை மீறி இருக்க அதனை பார்த்த நெட்டிசன்கள் வனிதாவை கழுவி ஊற்றினர்.

கமெண்ட் ஆப்ஷன் நிறுத்தம்
இருவருக்குமே வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கும் போது இதுபோன்ற போட்டோக்கள் தேவையா என கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள். இதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கமெண்ட் ஆப்ஷனை நிறுத்தி வைத்தார் வனிதா.

கட்டியணைத்தப்படி..
இந்நிலையில் வனிதாவும் அவரது கணவரான பீட்டர் பாலும் ஐ லவ் என்பதை குறிக்கும் வகையில் I என்ற எழுத்து மற்றும் ஹார்ட்டின் பிரின்ட் செய்யப்பட்ட டி ஷர்ட்டை அணிந்து கொண்டு கட்டியணைத்தப்படி நெருக்கமாக இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்

இங்கிலாந்து ராணி போல்
மேலும் குடும்பத்தில் அனைவரும் அதேபோன்று டி ஷர்ட்டை அணிந்திருக்கும் டிஷர்ட்டை அணிந்துள்ளனர். அந்த போட்டோக்களையும் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதேபோல் தலையில் தொப்பியுன் கழுத்து மற்றும் காதில் கிளிஞ்சல் மற்றும் சங்கால் உருவாக்கப்பட்ட அணிகலன்களை அணிந்து இங்கிலாந்து ராணியை போல் போஸ் கொடுத்துள்ளார்.

சென்னைக்கு ரிட்டர்ன்
தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வனிதா, கோவா ட்ரீப் முடிந்து விட்டதாகவும் சென்னைக்கு திரும்பி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் கோவா பயணம் சந்தோஷமாக இருந்ததாகவும் புரடெக்டிவாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











