இங்க இவ்வளவு பஞ்சாயத்து.. பீட்டர் பாலுடன் நடிகை வனிதா பர்த் டே பிக்னிக்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: நடிகை வனிதா, பீட்டர்பாலுடன் பிக்னிக் சென்றதாக வெளியிட்டுள்ள வீடியோவை கண்டு ரசிகர்கள் கண்டபடி விளாசியுள்ளனர்.

Recommended Video

Vanitha Vijayakumar பக்கத்தில் இருப்பது யார் தெரியுமா?

நடிகை வனிதா விஜயகுமாரின் பிரச்னை கொரோனாவை மிஞ்சும் விதமாக பரபரப்பில் இருக்கிறது.

தனது முதல் மனைவியை, முறையாக விவாகரத்து செய்யாத பீட்டர் பாலை அவர் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதுதான் பிரச்னைக்கு காரணம்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதா, 2007 ஆம் வருடம் அவரை விவாகரத்து செய்தார். பிறகு ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். 8 ஆண்டுகள் கழித்து பீட்டர் பால் என்பவரை இப்போது மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எலிசபெத் ஹெலன்

எலிசபெத் ஹெலன்

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் 2 வது திருமணம் செய்துகொண்டதாக புகார் கூறியிருந்தார். இது சமூக வலைதளத்தில் பரபரப்பானது. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்தனர். நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரியும் ஆதரவு தெரிவித்தனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

அவர்களை கண்டபடி சாடியிருந்தார் நடிகை வனிதா. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை, நேரலையில், நீ என்ன பத்தினியா? என்று ஆரம்பித்து அநாகரிகமாக பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்நிலையில், தஞ்சாவூர்காரர்கள் பற்றி தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். பிறகு டிவிட்டரை விட்டு வெளியேறினார்.

பிறந்த நாள் பார்ட்டி

பிறந்த நாள் பார்ட்டி

இதற்கிடையே, மீண்டும் ட்விட்டருக்கு வந்த வனிதா, பிறந்த நாள் பார்ட்டியை கொண்டாடினார். 'ஹேப்பி பர்த்டே மை லவ்.. குட்டிஸ் கேங்குடன் நள்ளிரவு கொண்டாட்டம் என யாருக்கு பிறந்தநாள் என குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் யாருக்கு பிறந்தநாள் வனிதா அக்கா? பீட்டர் பாலுக்கா என்று கேட்டனர். அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு புதிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் வனிதா.

லாக்டவுன் பார்ட்டி

அதில், காரில் பர்த்டே பிக்னிக் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், 'லாக்டவுன் பர்த்டே பார்ட்டி. வீட்டிலேயே தினமும் சாப்பிடறதால, இன்னைக்கு வெளியில போய் சாப்பிடலாம்னு ஒரு சேஞ்ச் தேவைபட்டது. அதனால பர்த் டே பார்ட்டியை கார்ல கொண்டாடறோம். இங்க பாருங்க ஜெய்னிதா (மகள்) கொரிச்சுட்டு இருக்காங்க. ஜோவிகாவும் ஒருபக்கம் சாப்பிட்டுட்டு இருக்காங்க.

வேண்டும் என்றே

வேண்டும் என்றே

லாக்டவுனால ரெஸ்டாரன்ட் உள்ள உட்கார்ந்து சாப்பிட முடியல. அதனால கார்ல உட்கார்ந்து சாப்பிடறோம்' என்று கூறியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் அவரை கண்டபடி விளாசி யுள்ளனர். இதைப் பார்த்தா பீட்டர் பால் குழந்தைகள் எப்படி கஷ்டப்படும்னு நினைச்சீங்களா? என்று சிலரும் இதுபோன்ற வீடியோக்களை, வேண்டும் என்றே பதிவிடுவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X