இவ்ளோ ரணகளத்துலேயும் ஒரு குதூகலம்.. நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய வனிதா.. ஆனா யாருக்கு?
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் நள்ளிரவில் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த மாதம் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்தார். அப்போது முதலே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவரை மீட்டுத்தருமாறு புகார் அளித்தார். அவருக்கு உதவிய திரை பிரபலங்களான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்திரன் உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்தார்.

டிவிட்டை நீக்கிய வனிதா
இதனால் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் மற்றும் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார் வனிதா. நயன்தாரா குறித்து பேசியதால் அவரின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். தொடர்ந்து நயன்தாரா தொடர்பான தனது டிவிட்டை நீக்கினார் வனிதா.

மன்னிப்பு கோரிய வனிதா
பின்னர், டிவிட்டரில் இருந்தும் விலகினார். ஆனால் நேற்று முதல் மீண்டும் டிவிட்டரில் ஆக்டிவானார் வனிதா. டிவிட்டரில் ரீஎன்ட்ரி கொடுத்த கையொடு, தஞ்சாவூரில் உள்ளவர்கள் இரண்டு பொண்டாட்டி வைத்திருப்பது சர்வ சாதாரணம் என்று கூறியதற்கு மன்னிப்பு கோரினார்.

குடும்பத்துடன் செல்பி
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை வனிதா, சூர்யாதேவி கைது குறித்த செய்தியை வெளியிட்டு எச்சரித்திருந்தார். இந்நிலையில் பீட்டர் பால் மற்றும் தனது மகள்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

யாருக்கு பிறந்தநாள்?
ஹேப்பி பர்த்டே மை லவ்.. குட்டிஸ் கேங்குடன் நள்ளிரவு கொண்டாட்டம் என யாருக்கு பிறந்தநாள் என குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யாருக்கு பிறந்தநாள் வனிதா அக்கா? பீட்டர் பாலுக்கா என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications