பீட்டருடன் வனிதா ரொமான்ஸ்.. வைரலாகும் போட்டோஸ்.. இது ஒரு பொழப்பா.. என விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: கணவர் பீட்டர் பாலுடன் நடிகை வனிதா ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இது ஒரு பொழப்பா தலையில் அடித்துக்கொள்கின்றனர்.
நடிகை வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தனது யூட்யூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் மீது காதல் கொண்டார்.
மகள்களின் அனுமதியுடன் கடந்த ஜூன் மாதம் கிறிஸ்தவ முறைப்படி மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார் வனிதா.

முதல் மனைவி புகார்
பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் தோளுக்கு உயர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரது முதல் மனைவி தனக்கு தனது கணவர் வேண்டும் என கூறி போலீஸில் புகார் அளித்தார்.

சாலை மார்க்கம்
இதனால் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது தான் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் வனிதா தனது 40வது பிறந்த நாளை கோவாவில் கொண்டாடி வருகிறார். சாலை மார்க்கமாகவே கணவர் மற்றும் மகள்களுடன் கோவா சென்றுள்ளார் வனிதா.

அங்க போயுத் சரக்குதானா?
கோவாவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் வனிதா. நேற்று பீச்சில் இருந்த போட்டோக்கள் மற்றும் சரக்குடன் இருந்த போட்டோக்களை எல்லாம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அங்க போயும் சரக்குதானா என விளாசினர்.

கண்ணாடி முன்பு நின்று
இந்நிலையில் பீட்டர் பாலுடன் நெருக்கமாக இருக்கும் செல்பிக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கண்ணாடி முன்பு நின்று இருவரும் செல்பி எடுத்துள்ளனர். அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா.

இது ஒரு பொழப்பா?
அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கண்ணாடிக்கு வந்த சோதனை என கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் இதெல்லாம் ஒரு பொழப்பா என்றும் கேட்டுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், என்ன பண்ணணும்.. இதை ஃபிரேம் போட்டு மாட்டனுமா என கேட்டுள்ளனர்.
Recommended Video

ஆட்டம் கொண்டாட்டமா
இன்னும் சில நெட்டிசன்கள், நீ ஏமாளியா இல்லை பீட்டர் பால் ஏமாளியா இல்லை உன் பிள்ளைகளா இல்லை அவர் பிள்ளைகளா என்பது விரைவில் வெளியே தெரிந்துவிடும். அதுவரை ஆட்டமா கொண்டாட்டமா....என கொண்டாடுங்கள் என சாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











