அப்போ கூட வாயை மூடலையே அக்கா.. வனிதாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை வனிதா விஜயகுமார் செம பிஸியாகி விட்டார். சினிமா சீரியல் என எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணுவதில்லை.

இதேபோல் தனது சமையல் நிகழ்ச்சிக்கு என யூட்யூப் சேனலையும் நடத்தி வரும் வனிதா, அதிலும் வீடியோக்கள் வெளியிட தவறுவதில்லை.

கிழித்து தொங்கவிட்ட வனிதா

கிழித்து தொங்கவிட்ட வனிதா

அதேநேரத்தில் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் வனிதா. பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்த வனிதா, அது தொடர்பாக விமர்சித்த திருமண பிரபலங்களை கிழித்து தொங்க விட்டார்.

என்னா வாய் இது?

என்னா வாய் இது?

லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி என பலரையும் தரக்குறைவாக திட்டி தீர்த்தார். அந்த வீடியோக்கள் வைரலாக, என்னா வாய் இது என நெட்டிசன்கள் மிரட்டு போயினர்.

ரம்யா கிருஷ்ணனுடன் மல்லுக்கட்டு

ரம்யா கிருஷ்ணனுடன் மல்லுக்கட்டு

சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, தனது பர்ஃபாமன்ஸுக்காக ஒரே ஒரு மதிப்பெண் வழங்கியதாக ரம்யா கிருஷ்ணனுடன் மல்லுக்கட்டினார். தன்னை பார்த்து பொறாமை படுகிறார்கள் என விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிவப்பு மனிதர்கள் ஸ்பாட்

சிவப்பு மனிதர்கள் ஸ்பாட்

இருப்பினும் தனது வேலையில் கவனமாக உள்ள வனிதா, எந்த படப்பிடிப்பில் பங்கேற்றாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு மனிதர்கள் படத்தில் நடித்து வரும் வனிதா நடிகர் லிவிங்ஸ்டன், நடிகை ராஜஸ்ரீ ஆகியோருடன் எடுத்த போட்டோக்கள் வைரலானது.

மேலும் ஒரு போட்டோ

மேலும் ஒரு போட்டோ

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து டப்ஸ்மேஷ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் வனிதா. இந்நிலையில் நடிகை வனிதா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

குரங்கு கதையை போல்

குரங்கு கதையை போல்

அதில் சீரியல் நடிகை சந்தியா, நடிகை ராஜஸ்ரீ ஆகியோர் வனிதாவுடன் உள்ளனர். குரங்கு கதை ஒன்றை ஞாபகப்படுத்தும் வகையில் ராஜஸ்ரீ கண்களை மூடியிருக்கிறார். சந்தியா காதுகளை மூடியுள்ளார்.

என்னால் பார்க்க முடியாது

என்னால் பார்க்க முடியாது

அதில் வாயை மூடியப்படி இருக்க வேண்டிய வனிதா ஒற்றை விரலை காட்டி மிரட்டுகிறார். மேலும் நீங்கள் பார்ப்பதை என்னால் பார்க்க முடியாது. நீங்கள் ஒருவேளை என்னை அழைத்து சென்றிருக்கலாம் என்றும் பின்னர் இருக்கலாம் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

போட்டோவுக்கு கூட முடியாதா?

போட்டோவுக்கு கூட முடியாதா?

வனிதா ஷேர் செய்துள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் போட்டோவுக்கு கூட உங்களால் வாயை மூடி இருக்க முடியாதா என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் எல்லாவற்றுக்கும் வாயை மூடி இருக்க கூடாது எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X