அங்க ஏதோ எழுதிருக்கீங்களே அது என்ன? வனிதாவின் நெஞ்சில் இருக்கும் டாட்டூ.. பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: வனிதா விஜயக்குமார் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது நெஞ்சில் வரைந்திருக்கும் டாட்டூ குறித்து விசாரித்துள்ளனர்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயக்குமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் சக போட்டியாளர்களை அவர் டாமினேட் செய்ததும் போட்டியாளர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

யூட்யூப் சேனல்

யூட்யூப் சேனல்

இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் டைட்டில் வின்னரான வனிதா, இதனை தொடர்ந்து சமையலுக்கான யூட்யூப் சேனலை தொடங்கினார்.

பீட்டருடன் திருமணம்

பீட்டருடன் திருமணம்

தன்னுடைய யூட்யூப் சேனலுக்கு உதவியாய் இருந்த பீட்டர் பாலுடன் காதல் கொண்ட வனிதா அவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான வனிதா மூன்றாவது திருமணம் செய்தது பேசு பொருளானது.

வெளுத்துவாங்கிய வனிதா

வெளுத்துவாங்கிய வனிதா

மேலும் பீட்டர் பாலுக்கு மனைவி, மகன், மகள் இருந்த நிலையில் அவரை வனிதா திருமணம் செய்ததும் சர்ச்சையானது. தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த வனிதா, தன்னை விமர்சிப்பவர்களை வெளுத்து வாங்கினார்.

குடும்பம் நடத்த முடியாது

குடும்பம் நடத்த முடியாது

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகி விட்டார். அவருடன் குடும்பம் நடத்த முடியாது என வீட்டை விட்டு விரட்டினார் வனிதா. மேலும் இருவரும் பிரிந்து விட்டதாகவும் வீடியோ வெளியிட்டார்.

கையில் சரக்குடன் வனிதா

கையில் சரக்குடன் வனிதா

இருந்த போதும் தனது வேலையில் கவனம் செலுத்தி வந்த வனிதா, மாலத்தீவில் சில் செய்த போட்டோக்களை வெளியிட்டு வந்தார். வனிதா கையில் சரக்குடன் இருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தலையில் கிரீடம்

தலையில் கிரீடம்

இந்நிலையில் வனிதா மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தலையில் இலை வடிவிலான கிரீடம், காதில் அதே மாடல் தோடு, கழுத்தில் செயின் என எல்லாம் ஒரே மாடலில் போட்டுள்ளார்.

நெஞ்சில் டாட்டூ

நெஞ்சில் டாட்டூ

இதில் அவரது நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூ ஹார்ட்டினுடன் பளிச்சென தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் நெஞ்சில் ஏதோ எழுதியிருக்கீங்களே அது என்ன என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் வயசானாலும் உங்களின் அழகும் ஸ்டைலும் குறையவேயில்லை என கூறி வருகின்றனர்.

எவன் பெயரையும்

எவன் பெயரையும்

ஏற்கனவே வனிதா தனது கையில் பீட்டர் பால் என வரைந்திருந்த டாட்டூவை அழித்து வேறு மாதிரி மாற்றினார். மேலும் இனி எவன் பெயரையும் பச்சை குத்த போவதில்லை என்றும் கூறியிருந்தார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X