வருங்கால கணவருடன் வனிதா அக்கா அசத்தல் செல்பி.. கெத்துதான் போங்க.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: வருங்கால கணவருடன் நடிகை வனிதா எடுத்த அசத்தல் செல்பி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

'என் வாழ்க்கை இனி சந்தோஷமா வாழ்ந்து காமிப்பேன்'

நடிகை வனிதா நாளை தனது காதலரான பீட்டர் பாலை கரம் பிடிக்கவுள்ளார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தானவர் வனிதா.

வனிதாவுக்கு 19 வயதில் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தனது அப்பாவான ஆகாஷுடன் வசித்து வருகிறார்.

சண்டை சச்சரவு

சண்டை சச்சரவு

இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வரும் நடிகை வனிதா, கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சண்டை சச்சரவு என சிக்கி பெரும் பிரபலமானார். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

நாளை திருமணம்

நாளை திருமணம்

இந்நிலையில் 27 ஆம் தேதியான நாளை நடிகை வனிதா தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்யவுள்ளார். லாக்டவுன் நேரம் என்பதால் வீட்டிலேயே எளிமையாக திருமணம் செய்யவுள்ளார். அவரது திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

பின்னர் தனது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வனிதா. வனிதாவின் திருமணத்திற்கு அவரது மகள் ஜோவிகா வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தனது தாய் குறித்து ஷேர் செய்திருந்த உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

காதலருடன் செல்பி

காதலருடன் செல்பி

இந்நிலையில் நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் தனது வருங்கால கணவரான பீட்டர் பாலுடன் காரில் செல்லும் போது எடுத்த செல்பியை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த செல்பிக்கு ஃபிங்கர்ஸ் க்ராஸ்டு.. இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

விஷ்வல் எடிட்டர்

விஷ்வல் எடிட்டர்

வனிதாவின் இந்த செல்பியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை வனிதா தனது காதலருடன் எடுத்த இந்த செல்பி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீட்டர் பால் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் விஷ்வல் எடிட்டராக பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X