என்னக்கா இப்படி பண்ணீட்டிங்க சூர்யாதேவியின் முழு முகவரியையும் வெளியிட்ட வனிதா.. விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: நடிகை வனிதா தன்னைப்பற்றி வீடியோ வெளியிட்ட சூர்யாதேவிக்கு கொரோனா என்று நேற்று தகவல் வெளியான நிலையில் அவரது முகவரியை பகிர்ந்து தலைமறைவாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்து வந்தவர் யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி. இவர் வனிதாவை தரக்குறைவாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இதுதொடர்பாக வனிதா ஏற்கனவே போலீஸில் புகார் அளித்திருந்த நிலையில் மீண்டும் சூர்யா தேவி வீடியோ வெளியிட்டார்.

சூர்யா தேவி கைது
இதனால் கோபமடைந்த வனிதா, சூர்யாதேவி மீது மீண்டும் புகார் அளித்தார். இதனால் கடந்த 22 ஆம் தேதி வடபழனி போலீசார் சூர்யா தேவியை கைது செய்து மறுநாள் ஜாமினில் விடுதலை செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சூர்யாதேவி வீடியோ
இந்நிலையில் சூர்யா தேவிக்கும், அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சூர்யா தேவி, தனக்கு கொரோனா இல்லை என்றும், போலீசார் வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

பொறுப்பற்றவர்
ஆனால் நடிகை வனிதா சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசாரும் சுகாதாரத்துறையினரும் தேடி வருவதாகவும், ஆனால் அவர் போனை எடுக்கமால் உள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும் சூர்யாதேவி மறைந்து கொண்டு எல்லோருக்கும் பரப்புவதாகவும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர் என்றும் பொறுப்பற்றவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நடிக்காதீர்கள்
இதனை பார்த்த நெட்டிசன்கள், அவர் தலைமறைவாகவில்லை அவருக்கு கொரோனாவும் இல்லை பொய் சொல்லாதீர்கள் என சூர்யா தேவி ஷேர் செய்த வீடியோவை ஷேர் செய்திருந்தனர். மேலும் நல்லவர் போன்று நடிக்காதீர்கள் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

சூர்யாதேவியின் முகவரி
இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு என கூறி சூர்யா தேவியின் முழு முகவரியுடன் ஒரு ஸ்டேட்மென்ட்டை ஷேர் செய்துள்ளார். மேலும் அவர் உண்மையிலேயே தலைமறைவாகி விட்டார்.

சூர்யா தேவியால் ஆபத்து
அந்த குழந்தைகளுடன் எங்கேயோ போய் உட்காந்துகொண்டு வீடியோ வெளியிட்டு வருகிறார். அவள் தன் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ குழந்தைகளுடன் கேமராவில் உடல் ரீதியாக நெருக்கமாக இருப்பதுடன், அவர்களையும் ஆபத்தில் தள்ளுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

எப்படி போடலாம்?
இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன மேடம் இப்படி ஒருத்தரோட பர்சனல் தகவல் மற்றும் முகவரியை எப்படி இப்படி பப்ளிக்கில் போடுகிறீர்கள் என்று விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











