என் கணவர் டீடோட்லர்.. ஆதாரத்தை வெளியிட்ட நடிகை வனிதா.. வெட்கமே இல்லையா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தன்னுடைய மூன்றாவது கணவர் ஒரு டீடோட்லர் என கூறிய வனிதா அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Vanitha வெளியிட்ட Evidence Video | Peter Paul, Elizabeth

நடிகை வனிதாவும் விஷ்வல் எடிட்டரான பீட்டர் பால் என்பவரும் கடந்த சனிக்கிழமை வீட்டிலேயே கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ஏற்கனவே இரண்டு திருமணம் ஆன வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். திருமணத்தின் போது இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

படுக்கையறையில் லிப்லாக்

படுக்கையறையில் லிப்லாக்

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக்கொண்டு இப்படியா லிப்லாக் முத்தம் கொடுப்பது என வனிதாவை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத நடிகை வனிதா, ரொமான்ஸ் தெரியாதவர்களுக்கு என்றுக் கூறி மீண்டும் படுக்கையறையில் எடுத்த போட்டோவை ஷேர் செய்தார்.

முதல் மனைவி புகார்

முதல் மனைவி புகார்

அதனை பார்த்தும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர். இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளே வனிதாவின் திருமணம் சர்ச்சைக்குள்ளானது. அதாவது, பீட்டர் பாலின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல் தனது கணவர் வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக குற்றம்சாட்டினார்.

டீடோட்லர்

டீடோட்லர்

மேலும் அவரை பொம்பள பொறுக்கி, குடிகாரன் என்றும் வசைபாடினார். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, ஆவேசமாக தனது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனது கணவர் ஒரு டீடோட்லர் என்றும் அவருக்கு குடிப்பழக்கம் கிடையாது என்றும் அடித்துப் பேசினார்.

ஆதாரம் உள்ளது

ஆதாரம் உள்ளது

திருமணத்தின் போது ஓபன் செய்யப்பட்ட ஷாம்பெய்ன் பாட்டிலை கூட அவர் குடிக்கவில்லை. நான்-ஆல்கஹாலிக் வொயின் தான் குடித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என்றும் கூறினார். அதையும் ரிலீஸ் செய்வேன் என்றார் வனிதா. மேலும் பீட்டர் பால் ஒரு வெஜ்டேரியன் என்றும் அவர் சாடினார்.

விளாசும் நெட்டிசன்ஸ்

விளாசும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் நடிகை வனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்சீன் வீடியோ என்ற இமேஜை ஷேர் செய்துள்ளார். மேலும் வீடியோ இப்போது வெளியாகிவிட்டது என்றும் அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். வனிதாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாய் கழுவி ஊற்றியுள்ளனர்.

புறக்கணிக்க வேண்டும்

புறக்கணிக்க வேண்டும்

எல்லா வீடியோவையும் ஷேர் செய்கிறீர்களே முதல் இரவு வீடியோவை எப்போது ஷேர் செய்வீர்கள் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். இன்னும் சிலர் வனிதாவை திட்டி தீர்த்திருப்பதோ, அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் நம் நேரத்தை வீணாக்கக்கூடாது என்றும் விளாசியிருக்கின்றனர்.

வெட்கமே இல்லையா?

வெட்கமே இல்லையா?

மேலும் சில நெட்டிசன்கள், உனக்கு வெட்கமே இல்லையா, அடங்க மாட்டியா என்றும் கடுமையாக வசை பாடியுள்ளனர். அப்படி என்ன அவசரம் அடுத்தவர் புருஷனை கூட்டிட்டு போய் வீட்டில் வைத்திருக்கிறீயே அசிங்கமாக இல்லையா என்றும் சாடியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X