குக்கூ.. குக்கூ.. இது வனிதா அக்கா வெர்ஷன்.. வேற லெவல்.. லைக்ஸை அள்ளும் வீடியோ!
சென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு வனிதா விஜயக்குமாரும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாடகி தீ, பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடிய பாடல் என்ஜாய் எஞ்சாமி.
இந்தப் பாடலுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு அடிமையாகி விட்டனர்.
என்ஜாய் எஞ்சாமி
தங்களுக்கு தெரிந்த ஸ்டெப்புகளை போட்டு அசத்தலாக நடனமாடி வருகின்றனர். நஸ்ரியா முதல் ஷாலு ஷம்மு வரை பல நடிகைகள் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

சுற்றி சுற்றி போஸ்
அந்த வகையில் நடிகை வனிதாவும் அப்பாடலுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வித விதமான சேலைகளை கட்டி சுற்றி சுற்றி போஸ் கொடுத்துள்ள வனிதா, பின்னணியில் என்ஜாய் எஞ்சாமி பாடலை ஒலிக்கவிட்டுள்ளார்.

என்ன குறை என்ன குறை..
ஏற்கனவே விதவிதமான டாப்ஸ்களை அணிந்து இதேபோல் ஒரு வீடியோவை ஷேர் செய்திருந்தார் வனிதா. இந்நிலையில் வனிதாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன குறை என்ன குறை எங்க வனிதா அக்காவுக்கு என்ன குறை என பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து படங்கள்
சில நெட்டிசன்கள் நீங்கள் கட்டிய சேலைகளையெல்லாம் மீஷோ ஆப்பில் ரீசேல் செய்து வருகிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர். நடிகை வனிதா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

ஹரி நாடாருடன்..
அனல் காற்று, அழகானது காதல் 2கே, அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹரி நாடாருடன் அழகானது காதல் 2கே படத்தில் வனிதா நடித்து வரும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications