4வது திருமணம்.. உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. நெட்டிசன்களிடம் எரிந்து விழும் வனிதா!
சென்னை: தனது திருமண வாழ்க்கை குறித்து பேசும் நெட்டிசன்களை வெளுத்து வாங்கியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா நான்காவது திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவருடன் வனிதாவுக்கு காதல் மலர்ந்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது.

மாலத்தீவு ட்ரிப்
மேலும் வனிதா கடந்த சில நாட்களாக தனது கழுத்தில் அணிந்திருக்கும் கறுப்பு மணி அவரது புதிய கணவர் அணிவித்ததுதான் என்றும் கூறப்பட்டது. அதோடு வனிதா சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றது கூட தனது புதிய கணவருடன் தான் என்றும் செய்திகள் பரவின.

சிங்கிள் அன்ட் அவைலப்பிள்
ஆனால் இதனை வனிதா விஜயகுமார் மறுத்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர், வதந்திகளை நம்பாதீர்கள், நான் இன்னும் சிங்கிள் மற்றும் அவைலப்பிள் என்று குறிப்பிட்டிருந்தார்.

திருமணத்திற்கு தயாரா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவைலப்பிள் என்று கூறியதற்கு அர்த்தம் என்ன? அடுத்த திருமணத்திற்கு தயாராக உள்ளேன் என்று விளம்பரப்படுத்தி கொள்கிறீர்களா என்று கூறி விளாசி வருகின்றனர்.

நெட்டிசன் கருத்து
தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசும் நெட்டிசன்களை வெளுத்து வாங்கி வருகிறார் வனிதா. அந்த வகையில் தற்போது நெட்டிசன் ஒருவர், ஒரு நாள் வதந்திகள் உண்மையாகும் போது, இது என் வாழ்க்கை, தயவுசெய்து யாரும் தலையிட வேண்டாம். நான் என் மகள்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறுவார் என பதிவிட்டிருந்தார்.

பதில் சொல்ல அவசியமில்லை
இதனை பார்த்த வனிதா செம கடுப்பாகியுள்ளார். அந்த நெட்டிசனை திட்டி தீர்த்து பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார் வனிதா. அவர் பதிவிட்டிருப்பதாவது, அப்படி நடந்தால், நானும் என் மகளும் அதனால் மகிழ்ச்சியாக இருந்தால், அப்படியே இருக்கட்டும்... நாங்கள் உங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை..

மனவளர்ச்சியற்றவர்..
நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்... நீங்களே கேளுங்கள் நீங்கள் மனவளர்ச்சியற்றவர்.. உங்கள் வேலையை பாருங்கள் என கடும் கோபமாக பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்த போதும் வனிதா அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











