பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் பாலாவை செருப்பால் அடிப்பேன்.. ஆவேசமான வனிதாக்கா.. வைரல் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியின் கேரக்டர் குறித்து தவறாக பேசிய பாலாஜியை செருப்பால் அடிப்பேன் என வனிதா படு ஆவேசமாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் கொளுத்தி போட்டு வரும் பாலாஜி, குளிர் காய்ந்து வருகிறார்.
அவரது நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள், பாலாஜி சைக்கோ போல் நடந்து கொள்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யாரும் குரல் கொடுக்கவில்லை
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சனம் ஷெட்டியை தறுதலை என்றும் அவளே இவளே என்றும் தரக்குறைவாக பேசினார். அதுகுறித்து ஆரியை தவிர, மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் பெரிதாக எதுவும் பேசவில்லை.

அட்ஜெஸ்ட்மெண்ட் புகார்
இதை பார்த்து ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்நிலையில் சனம் ஷெட்டி அட்ஜெஸ்மென்ட் செய்துதான் அழகிப் பட்டம் வென்றார் என பாலாஜி கூறியது, டெலிட் செய்யப்பட்ட புரமோவின் மூலம் தெரியவந்தது.

ரெட் கார்டு
பாலாஜி மீதான புகார் கடிதத்தில் சனம் ஷெட்டி இதனை குறிப்பிட்டார். அதன் ஸ்க்ரீன் ஷாட் வைரலானது. இதனை தொடர்ந்து பாலாஜி முருகதாஸை ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வனிதா கருத்து
இதுகுறித்து கமல் விசாரிக்க வேண்டும், பெண்கள் மீதான இதுபோன்ற வார்த்தை வன்முறைகளை கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை வனிதா கருத்து தெரிவித்துள்ளார்.

செருப்பால் அடிப்பேன்
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சனம் ஷெட்டியின் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசிய பாலாஜியை கடுமையாக விமர்சித்துள்ளார். தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் பாலாஜியை செருப்பாலேயே அடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

தர்ஷனுடன் சண்டை
மேலும் சனம் பற்றி பாலாஜி எப்படி இவ்வாறு சொல்லலாம். தர்ஷன் சனம் இடையே பிரச்சனை வந்த போது கூட சனம் ஷெட்டியை தப்பா பேசியதுக்குகாக தான் தர்ஷனிடம் சண்டையிட்டேன். அதனால்தான் என் தம்பி தர்ஷனை நான் திட்டினேன்.

அம்மாவையே தப்பா பேசினான்
ஒரு பெண்ணை பார்த்து எப்படி இப்படி சொல்லலாம். விஜய் டிவி இதனை கண்டிப்பாக ஒளிபரப்பியே ஆக வேண்டும். பாலாஜி கைல கெடச்சா செருப்பாலேயே அடிப்பேன். அவங்க அம்மாவை பத்தியே தப்பா பேசுனவன் அவன்.

நிரூபிக்க வேண்டும்
இவன் மிஸ்டர் இந்தியா அப்படிதான் அட்ஜெஸ்ட் செய்து வாங்கினானா? தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் சரியான முறையில் நிரூபிக்க வேண்டும். இப்படி ஒரு பெண்ணின் கேரக்டரை பற்றி பேசக்கூடாது. இதனால்தான் எனக்கு மீடுவே பிடிக்காது.. இவ்வாறு நடிகை வனிதா ஆவேசமாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











