twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீ விளக்கு புடிச்சியா.. எப்படி அப்படி பேசலாம்.. என்ன தைரியம்.. பாலாஜியை டார் டாராய் கிழித்த வனிதா!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகி பட்டத்தை வென்றதாக கூறிய பாலாஜி முருகதாஸை கிழித்து தொங்கவிட்டுள்ளார் வனிதா.

    பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி ஆரம்பம் முதலலேயே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

    முதல் வாரத்திலேயே தனது அப்பாவையும் அம்மாவையும் பற்றி தப்பு தப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினார் பாலாஜி.

    அப்பா பிஸ்னஸ் மேன்

    அப்பா பிஸ்னஸ் மேன்

    ஆனால் அவர் தனது பெற்றோர் குறித்து பேசியது எல்லாமே பொய் என சமூக வலைதளங்களில் ஆதாரங்கள் காட்டப்பட்டன. பாலாஜியின் அப்பா ஒரு பிஸ்னஸ் மேன் என்றும், அம்மா ஒரு இல்லத்தரசி என்றும் பலரும் தெரிவித்தனர்.

    பெரும் அதிருப்தி

    பெரும் அதிருப்தி

    மேலும் பாலாஜி ஒரு வசதியான வீட்டு பையன் என்றும் அதற்கான ஆதாரங்களை நிறுப்பித்தனர். இதனால் அவர் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். பிக்பாஸ் வீட்டிலும் அவரது நடத்தை சுத்தமாக பிடிக்கவில்லை.

    சனம் தறுதலை

    சனம் தறுதலை

    பலரிடமும் ஆட்டிட்யூட் காட்டி வரும் பாலாஜி, யாரையும் மதிக்காமல் ரொம்பவே திமிராக நடந்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸின் நேற்று முன்தினம் நடந்த எபிசோடில் சனம் ஷெட்டியை தறுதலை என்றும் அவளே இவளே என்றும் தரக்குறைவாக பேசினார்.

    அட்ஜெஸ்மென்ட்

    அட்ஜெஸ்மென்ட்

    இதை பார்த்தே ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்நிலையில் சனம் ஷெட்டி அட்ஜெஸ்மென்ட் செய்துதான் அழகிப் பட்டம் வென்றார் என பாலாஜி கூறியது, டெலிட் செய்யப்பட்ட புரமோவின் மூலம் தெரியவந்துள்ளது.

    நடிகை வனிதா

    நடிகை வனிதா

    பாலாஜி மீதான புகார் கடிதத்தில் சனம் ஷெட்டி இதனை குறிப்பிட்டுள்ளார். அதன் ஸ்க்ரீன் ஷாட் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை வனிதா கருத்து தெரிவித்துள்ளார்.

    மிரண்ட வனிதா

    மிரண்ட வனிதா

    இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தொகுப்பாளர், சனம் ஷெட்டி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது குறித்து கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் வனிதா, அப்படியா சொன்னார் என்று மிரட்சியுடன் கேட்டுள்ளார்.

    விளக்கு புடிச்சியா?

    விளக்கு புடிச்சியா?

    மேலும் இல்லை.. இல்லை.. இப்படி பேசக்கூடாது என்று கூறும் வனிதா, தாயை பற்றி தவறாக பேசிய போதே நாம யோசிக்கணும். உனக்கு என்ன தைரியம் மேன்? விளக்கு புடிச்சியா? நான் கேட்குறேன்.. ஓப்பனா கேப்பேன்..

    என்ன துணிச்சல்?

    என்ன துணிச்சல்?

    உனக்கு என்ன துணிச்சல்? நீ எப்படி மற்றொரு பெண்ணின் கேரக்டரை பற்றி பேசலாம்? குறிப்பா அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி நீ எப்படி பேசலாம்? நீ எப்படி அதில் தலையிடலாம்? வெரி சாரி.. அப்படி பேசினார் என்றால் நான் பாலாவுக்கு எதிராய்தான் பேசுவேன்.

    அங்கேயே காலி

    அங்கேயே காலி

    அவர் ஹேண்ட்சமாய் இருக்கலாம், ஸ்டைலாய் இருக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் யாரும் இதுபோன்ற நபரை ஊக்கப்படுத்த மாட்டார்கள் பாராட்டவும் மாட்டார்கள். அங்கேயே காலி. உனக்கு என்ன துணிச்சல்? என ஆவேசமாக பேசியுள்ளார்.

    English summary
    Actress Vanitha slams Balaji for saying Sanam adjustments. Sanam Shetty's complaint against Balaji has mentioned that Sanam adjust with the Beauty Pegean organizers to get the tittle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X