புதிய சேனல் துவங்கும் வனிதா.. இலங்கைக்கு பயணம்.. கவின், லாஸ்லியாவை பேட்டி எடுக்க ரசிகர்கள் கோரிக்கை

புதிய சேனல் ஒன்றை துவங்க இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

Recommended Video

Vanitha Vijaykumar Comali Show: பத்தவைக்க வரும் வனிதா அக்கா

சென்னை: புதிய சேனல் ஒன்றை துவங்க இருப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் சூசகமாக டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதல் படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பெரிய கலைக்குடும்பத்து வாரிசு என்பதால் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அடுத்தடுத்து அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை.

இதனால் சினிமாவில் இருந்து விலகிய அவருக்கு, இளம் வயதிலேயே பெற்றோர் திருமணம் முடித்து வைத்தனர். முதல் இரண்டு திருமணங்களுமே தோல்வியில் முடிந்து விட தற்போது தனது இரு பெண் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.

சர்ச்சை

சர்ச்சை

இடையில் சில படங்களை தயாரித்து, இயக்கி, நாயகியாகவும் நடித்தார். ஆனால் அப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதற்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக பல சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார்.

பிக் பாஸ் சீசன் 3

பிக் பாஸ் சீசன் 3

இந்த சூழ்நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சண்டைக்கோழியாக மாறி நிகழ்ச்சிக்கு தேவையான கண்டெண்டுகளை வாரி வழங்கியதால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பிக் பாஸ் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வனிதா, அடுத்து தனது பட வேலைகளை ஆரம்பித்து விட்டார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

அதற்கு இடையிலேயே சன் டிவியில் சந்திரலேகா சீரியலிலும் நடித்தார். அது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு திரைப்படங்களிலும் வில்லி கதாபாத்திர வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது.

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

ஆனால் அவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத வனிதா, அதிரடியாக ஒரு சேனல் தொடங்க முடிவெடுத்துள்ளார். சேனல் என்றதும் தொலைக்காட்சி சேனல் என நினைத்து விடாதீர்கள். அது ஒரு யூடியூப் சேனல் எனக் கூறப்படுகிறது.

சூசக டிவீட்

இதனை சூசகமாக ஒரு டிவீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் வனிதா. தனது செல்பி ஒன்றை வெளியிட்டு, #vanithastravels #vanithavijaykumarchannel #newbeginnings என வனிதா தெரிவித்துள்ளார். வனிதாவின் இந்த யூடியூப் சேனல் பயணங்கள் பற்றியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

நிச்சயம் எப்படியும் அக்கா கண்டெண்ட் கொடுத்து, என்டர்டெயின்மென்ட் தருவார் என அவரது ரசிகர்கள் வனிதாவின் இந்தப் பதிவுக்கு கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். அதோடு, புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வனிதாவிற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

கோரிக்கை

கோரிக்கை

வனிதாவின் டிவீட்டை பார்த்த கவின், லாஸ்லியா ஆதரவாளர்களோ அவர்களை பேட்டி எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் வனிதா தற்போது இலங்கை சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தனது மற்றொரு டிவீட்டில், ‘ஆயுபொவன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பயணம்?

இலங்கை பயணம்?

இலங்கை விமானங்களில் நுழைந்த உடனே ஆயுபொவன் என்று தான் கூறி நம்மை வரவேற்பார்கள். இதை வைத்து தான் வனிதா இலங்கை சென்றிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அவரது முதல் வீடியோவே இலங்கைப் பயணம் பற்றியதாகத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: vanitha வனிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X