பீட்டரை பிரிந்த சோகம்.. ரொம்ப வலிக்குது.. வனிதா பதிவிட்ட டிவிட்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை வனிதா உருக்கமாக பதிவிட்டுள்ள டிவிட் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே நடிகை வனிதா அதிகம் செய்திகளில் அடிபட்டு வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா பிக்பாஸே வீ டே தன்னுடைய வீடுதான் என்பதை போல் அதிகாரம் செலுத்தினார்.

கழுவி ஊற்றப்பட்ட வனிதா
அதோடு சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் சண்டைபோடுவது, கொளுத்தி போடுவது என ரகளை செய்தார். இதனால் பிக்பாஸ் வீட்டிலேயே அவருக்கு வத்திக்குச்சி வனிதா என பெயர் வைத்தனர். சமூக வலைதளங்களிலும் அதிகம் கழுவி ஊற்றினர்.

4 மாதத்தில் பிரிவு
இந்நிலையில் தனது யூட்யூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் 6 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. பீட்டர் பால் மீண்டும் மதுவுக்கு அடிமையானதால் அவரை பிரிந்து விட்டதாக வீடியோ வெளியிட்டார்.

கண்ணீர் விட்ட வனிதா
மேலும் திருமணத்தில் தன்னுடைய அதிர்ஷ்டம் அவ்ளோதான் என்றும் கண்ணீர்மல்க கூறினார் வனிதா. வனிதாவின் இநத் வீடியோ பெரும் வைரலானது. வனிதா பீட்டர் பாலை விட்டு விரட்டியதால் பீட்டர் பால் நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

மறுத்த வனிதா
மேலும் வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை சந்தித்து மீண்டும் சேர்ந்து வாழ அழைத்தாகவும் ஆனால் அதற்கு பீட்டர் பால் மறுத்ததாகவும் செய்திகள் தீயாய் பரவின. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்தார் வனிதா.

காதலில் முட்டாளாய்..
தான் யாரையும் சந்திக்கவில்லை. பீட்டர் பாலுடன் தனக்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை, காதலில் எவ்வளவு முட்டாளாய் இருந்துள்ளேன் என்பதையும் காதலில் எனக்குள்ள அதிர்ஷ்டத்தையும் இப்போது புரிந்து கொண்டேன் என உருக்கமாக டிவிட்டியிருந்தார் வனிதா.

வனிதா உருக்கம்
அதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படியே இருங்கள் வனிதா அக்கா, பீட்டர் பால் திரும்பி வந்து திருந்தி விட்டதாக கூறினால் எற்றுக்கொள்ளாதீர்கள் என்றனர். இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள டிவிட் ஒன்று பெரும் வைரலாகி வருகிறது.

வேதனையானது..
அவர் பதிவிட்டிருப்பதாவது, வளர்வது எளிதானது அல்ல ... வேதனையானது..ஆனால் அது மதிப்புக்குரியது என பதிவிட்டுள்ளார். கடைசியாக பீட்டர் பால் குறித்து பதிவிட்ட டிவிட்டிலும் அவர் வளர்ந்துவிட்டார். அவருக்கானதை தேர்வு செய்துவிட்டார் என்று பதிவிட்டிருந்தார்.

ரசிகர்கள் ஆதரவு
இந்நிலையில் தற்போதும் அதே போன்ற பதிவை வனிதா ஷேர் செய்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள், பீட்டர் பாலின் பிரிவைதான் வனிதா இவ்வளவு வேதனையுடன் பதிவிட்டுள்ளார் என கூறி வருகின்றனர். மேலும் ஸ்ட்ராங்காக இருங்கள் அக்கா என்றும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சரியாக சொன்னீர்கள்
வனிதா, குடும்பத்தினர் யாருடைய ஆதரவும் இல்லாமல், இரண்டு பெண் குழந்தைகளுடன் சிங்கிள் மதராக தனியாக சமாளித்து வாழ்க்கை நடத்துவதை குறிப்பிட்டு இப்படி டிவிட்டியுள்ளாரா என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் சரியாக சொன்னீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











