Vanitha vijayakumar: மகளுக்கு பேஷன் டிசைனராக செயல்பட்ட வனிதா விஜய்குமார்.. அம்மான்னா சும்மாயில்ல!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், அடுத்தடுத்து பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
தற்போது அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

முதல் வாரத்திலேயே தன்னுடைய கல்வி குறித்து விசித்ராவுடனான இவரது வாக்குவாதம் அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்தது.
நடிகை வனிதா விஜயகுமார்: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மனதில் பட்டதை அப்படியே பேசி அதன்மூலம் விமர்சனங்களை சந்தித்து வருபவர். விஜய்யுடன் சந்திரலேகா என்ற படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து குடும்பம், குழந்தைகள் என செட்டில் ஆன இவர், சமீபத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது.
வனிதா மகள் ஜோவிகா: இதனிடையே இவரது மகள் ஜோவிகா தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஜோவிகாவும் அதிரடி சரவெடியாக தன்னுடைய செயல்பாடுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 9வது வகுப்புவரை மட்டுமே படித்துள்ள ஜோவிகா, சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் அதற்கு முன்னோட்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிரடி செயல்பாடு: இவர் பள்ளிப்படிப்பை முடிக்காத நிலையில், அவர் அதை தொடர வேண்டும் என்று விசித்ரா கூற, அதுகுறித்து பேச வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜோவிகா. தொடர்ந்து விசித்ராவுடனும் பிரதீப் உள்ளிட்டவர்களுடனும் தன்னுடைய போல்டான கருத்துக்களை பேசினார். விசித்ராவை இவர் ஒருமையில் பேசியது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. தன்னுடைய அம்மா வயதிலான ஒருவரை இப்படி பேசியது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
ரசிகர்களை கவர்ந்த ஜோவிகா: ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் ஜோவிகாவின் அவுட்பிட்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரது உடைகள் அவருக்கு அதிகமான அழகையும் கவர்ச்சியையும் கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளன. மேலும் அவர் ப்ரீத்தா விஜயகுமார் போல தோற்றமளிப்பதாகவும் கமெண்ட்கள் எழுந்துள்ளன. இதனிடையே தன்னுடைய மகளுக்கு காஸ்ட்யூம் டிசைனராக வனிதா தான் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
பேஷன் டிசைனரான வனிதா விஜயகுமார்: தன்னுடைய மகளுக்கு பேஷன் டிசைனராக செயல்பட்டு வருவது மட்டுமில்லாமல் முன்னதாக ப்ரீதா விஜயகுமாருக்கும் வனிதாதான், பேஷன் டிசைனர், ஸ்டைலிஸ்ட், ஹேர் டிரஸ்ஸர் மற்றும் மேக்கப் பெண்ணாக செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஒரு பேஷன் கடையை நடத்திவரும் வனிதா, தன்னுடைய மகளின் சிறப்பான உடைகளை வடிவமைத்துள்ளார். இதன்மூலம் சிறப்பான உடைகளில் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











