ஒருத்தரோட முகமூடிக்கு பின்னாடி ஒளியாதீங்க.. வனிதா அக்கா அட்வைஸ்.. ஆமாம்.. இது யாருக்கு?
சென்னை: நடிகை வனிதா ஒருத்தரோட முகமூடிக்கு பின்னாடி ஒளியாதீங்க என அட்வைஸ் பண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.
சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனல் நடத்தி வரும் வனிதா, யூட்யூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவருடன் காதல் கொண்டார்.

பெரும் சர்ச்சை
ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்தான வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் தனது மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை இரண்டாவது திருமணம் செய்ததால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

கருத்து சொல்லும் வனிதா
இருந்த போதும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத வனிதா, தொடர்ந்து சமூக வலைதளங்களில் போட்டோக்கள் வீடியோக்கள் என பதிவிட்டு வருகிறார். அவ்வப்போது கருத்து கூறும் வனிதா, சில சமயம் அட்வைஸும் கூறி வருகிறார். அவற்றை பார்த்து பாராட்டுபவர்களும் உண்டு திட்டுபவர்களும் உண்டு.

மீண்டும் வீடியோ
தற்போது விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் வனிதா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஏதாவது ஒரு வீடியோவை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஒளியாதீங்க..
ஓவர் மேக்கப்பில் அட்வைஸ் செய்துள்ளார் வனிதா. அவர் பேசியிருப்பதாவது, வாழ்க்கையில நமக்குன்னு ஒரு அடையாளம் வேணும். ஒருத்தரோட முகமூடிக்கு பின்னாடி ஒளியாதீங்க.. அது உங்களுக்கு பிடிச்ச நடிகரா இருக்கலாம்.. உங்க அப்பா அம்மாவா இருக்கலாம்.. ஆனா உங்களோட முகவரி உங்களோட அடையாளம்..
View this post on Instagram#shorts #motivation #vv #vanithavijaykumar
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on
ஆமாம் யாருக்கு இது?
கிரியேட் பண்ணுங்க உங்களால முடியும்.. இவ்வாறு படு சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டும் குரலில் சீரியஸ்னஸை காட்டியும் மிரட்டி விட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதை யாருக்கு சொல்றீங்க என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











