நடனமாடிய கையோடு மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறிய வனிதா.. பிக்பாஸ் ஜோடிகள் புரமோ!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறிய புரமோ வெளியாகியுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற பிரபலங்களுடன் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில் 4 சீசன்களில் பங்கேற்ற சில பிரபலங்கள் கலந்து கொண்டு ஜோடி ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.

இன்றைய புரமோ

இன்றைய புரமோ

இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான இன்றைய புரமோ வெளியாகியுள்ளது.

காவிய காதல் பாடல்கள்

காவிய காதல் பாடல்கள்

வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடில், ரொமான்ஸ் ரவுண்டு உள்ளது. இதில் பழைய படங்களில் இடம்பெற்ற காவிய காதல் பாடல்களுக்கு நடனமாடுகின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

இதில் நினைத்ததை முடிப்பவன் படத்தில் எம்ஜிஆர் மஞ்சுளா இணைந்து நடனமாடிய ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என்ற பாடலுக்கு வனிதாவும் சுரேஷ் சக்கரவர்த்தியும் நடனமாடியுள்ளனர்.

ரொமான்ஸ் ஃபார்மிங்

ரொமான்ஸ் ஃபார்மிங்

அவர்களின் பர்ஃமான்ஸ் அசத்தலாக இருந்ததாக நேற்று வெளியான புரமோவிலேயே நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இருவருக்குள்ளும் ரொமான்ஸ் ஃபார்மானதாகவும் கூறினார்.

50 வருடம் கழித்து

50 வருடம் கழித்து

இந்நிலையில் இன்றைய புரமோவில் பேசியுள்ள வனிதா, செம பாடல், 50 வருடம் கழித்து அதே பாடலுக்கு நான் ஆடுகிறேன் என்றால் அது வேற லெவல் என்கிறார். அப்போது பேசும் ரம்யா கிருஷ்ணன், இதுபோன்ற ஒரு வாய்ப்பு எல்லா மகள்களுக்கும் கிடைக்காது என கூறுகிறார்.

கண்ணீர்விட்ட வனிதா

கண்ணீர்விட்ட வனிதா

மேலும் இன்று வரை தான் மஞ்சுளாவை மிஸ் பண்ணுவதாகவும் அவரை போன்ற ஒரு மனுஷியை பார்க்க முடியாது என்றும் புகழாரம் சூட்டுகிறார். அப்போது மேடையில் உள்ள ஸ்க்ரீனில் மஞ்சுளாவின் போட்டோ இடம்பெற கண்ணீர்விட்டு கதறுகிறார் நடிகை வனிதா.

தனியாக வசிக்கும் வனிதா

தனியாக வசிக்கும் வனிதா

குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டதால் நடிகை வனிதா விஜயகுமார் யாருடனும் தொடர்பில்லாமல் உள்ளார். மேலும் இதுவரை செய்த 3 திருமணங்களும் விவாகரத்தில் முடிய வயதுக்கு வந்த 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X