“ஏமாற்றிய பாவிகளை மன்னித்துவிட்டேன்“..வனிதா யாரை சொல்யிருக்காங்கனு பாருங்க!

சென்னை : பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளாக தம்பதியினரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தனது பெற்றோர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக குடும்பத்திலிருந்து விலகி உள்ளார்.

Recommended Video

Vanitha Vijaykumar | சொந்தம் விட்டுபோகுமா என்ன? *Kollywood | Filmibeat Tamil

இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக இருக்கும் வனிதா, தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து உட்பட எந்த முக்கியமான தருணங்களிலும் தனது வாழ்த்துக்களை பகிர மறப்பதில்லை.

வனிதா சமீபத்தில் யானை படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஏமாற்றிய பாவிகளை மன்னித்துவிட்டேன் அவர் கூறியுள்ளதால், வனிதா இப்படி டென்ஷனாகி யாரை கூறுகிறார் என்று கேட்டு வருகின்றனர்.

யானை

யானை

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த யானை திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக அமைந்து பேமிலி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. யானை படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை வனிதா, கடினமான உழைப்பும்,விடா முயற்சியும் நிச்சயம் தோற்காது என வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

வனிதாவை சேர்த்துக் கொள்வீர்களா?

வனிதாவை சேர்த்துக் கொள்வீர்களா?

இதையடுத்து, யானை படம் வெற்றிபெற்றதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த அருண் விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர், படத்தில் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி இருக்கீர்கள் , உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார். இதற்கு அவர் பதில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

சுயநலமில்லாதவர்கள்

சுயநலமில்லாதவர்கள்

இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், மதிப்புமிக்க பொருட்கள், சொத்துக்களை எதிர்பார்க்காத குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள் பல லட்சியங்களை வைத்து இருக்கிறார்கள். அவர்களும் என்னைப் போல் தலை நிமிர்ந்து உழைத்து சாதிப்பார்கள். குடும்ப ஆதரவு இல்லாமல் சுயமாக உழைத்து முன்றேறி வந்த பெண்கள். அன்பாக எங்களை நேசிப்பவர்களையும் நாங்கள் நேசிக்கிறோம்.

மறப்போம் மன்னிப்போம்

மறப்போம் மன்னிப்போம்

இணையத்தில் சில செய்திகள் பரவி வருவதைப் பார்த்து ... நான் என் வலியையும் துயரத்தையும் விட்டுவிட்டு ஒரு பெரிய சிறந்த மனிதனாக மாறிவிட்டேன். வாழ்க்கையில் பாவம் செய்த, என்னை காயப்படுத்திய, அவமானப்படுத்திய , என்னை ஏமாற்றிய பாவிகளை நான் மன்னித்துவிட்டேன். எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மறப்போம் மன்னிப்போம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவை பல ரசிகர்கள் எதற்கு எடுத்தாலும் சண்டைப்போடும் வனிதாவா இது என கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X