சிங்கத்தோடு நடிக்கும் வனிதா விஜகுமாரின் மகன்.. எமோஷனில் கண் கலங்கும் பாசக்கார அம்மா!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் என்றாலே சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் அதிர்ந்து போவார்கள். காரணம், வனிதா விஜயகுமாரின் அதிரடியான பேச்சுதான். இவர் தற்போது நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் புரோமோசன் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அந்தகன் படம் குறித்த புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் வனிதா விஜயகுமாரின் மகன் குறித்தும், அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளது குறித்து பேசினார். வனிதா விஜயகுமார் ஆகாஷ் என்பவரை தான் முதன்முதலில் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும் உள்ளார்.

வனிதா விஜயகுமார் தனது கணவர் ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பின் தன் தந்தையுடன் சென்றுவிட்டார் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி. அதேபோல் வனிதா விஜயகுமார் தனது மகள்களுடன் வசித்து வருகின்றார். தனது தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக குடும்பத்தில் இருந்து பிரிந்தே தனது மகள்களை வளர்த்துள்ளார்.

கதாநாயகன் அறிமுகம்: இந்நிலையில் கடந்த வாரம் வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள மாம்போ படத்தின் கதாநாயகன் அறிமுக விழா நடைபெற்றது. அப்போது வனிதாவின் மகனாக ஸ்ரீஹரியை அறிமுகம் செய்துவைத்தார் நடிகரும் வனிதா விஜயகுமாரின் அப்பாவுமான விஜயகுமார். அப்போது பேசிய விஜயகுமார், இந்த படத்தின் கதையைக் கேட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர்தான் படத்தின் கதையைக் கேட்டு கதை நன்றாக உள்ளது, ஒரு சிங்கம் ஒரு கதாநாயகன் கதைக்களமே நன்றாக உள்ளது எனக் கூறியது மட்டும் இல்லாமல் இதில் நடிக்கச் சொன்னார் எனக் கூறினார்.

எமோஷன் : இந்நிலையில் அந்தகன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமாரிடம் அவரது மகன் கதாநாயகனாக நடிக்கவுள்ளது குறித்தும், அவர் சினிமாவுக்கு அறிமுகமாவது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், " என்னோட எமோஷன்களை எல்லாம் ரொம்ப நாள் கண்ட்ரோல் பண்ணி வச்சிருந்தேன். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சொல்வாங்க. ஸ்ரீஹரிக்கு அவ்ளோ பெரிய மேடை கிடைக்கும்னு எதிர்பார்க்கவில்லை. நல்ல தயாரிப்பு நிறுவனம், பிரபுசாலமன் மாதிரி மிகப் பெரிய டைரக்டர் படத்துல அறிமுகம் ஆகுறான்.

சிங்கம்: சிங்கத்தோட நடிக்குறான்னு சொல்றாங்க, சிங்கத்துகூட பழகி நடிக்கறத நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கூட சிங்கத்து கிட்ட என்னால போக முடியுமானு தெரியல. மிகவும் பெருமையா இருக்கு" என பேசியிருந்தார். அப்போது வனிதா விஜயகுமாரின் கண்கள் லேசாக கலங்கியது. அப்போது அங்கிருந்த நடிகர் பிரசாந்த் வனிதா விஜயகுமாரின் மகனுக்கு வாழ்த்து கூறினார்.

கண்ணீர்: ஏற்கனவே கதாநாயகன் அறிமுக விழா நடைபெற்றது தொடர்பாக வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை என்னுடைய மூத்த மகன் நடிகனாக மாறி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் என்று விஜய் ஸ்ரீஹரியை டேக் செய்து இருக்கிறார். அதோடு என்னுடைய மகனுக்காக கதை கேட்டு ஆசிர்வாதம் செய்த ரஜினி அங்கிளுக்கு ரொம்பவும் நன்றி. என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது. அவன் இன்னும் மேலும் அதிகமாக வளர வேண்டும்" என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











