பிரசாந்த்திற்கு கிடைத்ததைப் போல் அப்பா எனக்கு கிடைக்கவில்லை - எமோஷனலாக பேசிய வனிதா விஜயகுமார்

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் அந்தகன். இந்த படத்தினை நடிகரும் இயக்குநரும் நடிகர் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வந்து கொண்டு உள்ளது.

இந்நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் படத்தின் புரோமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று படத்தின் ஆந்தம் பாடலை ரிலீஸ் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆந்தம் பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Vanitha Vijayakumar Prasanth

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் படத்தில் நடித்துள்ள நடிகை வனிதா விஜயகுமார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர் தன் உறையில், " இன்றைய நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள். அந்தகன் என் வாழ்க்கையில் நான் நடித்த படம் இல்லை, இது அதற்கும் மேல். இன்னும் சொல்லப்போனால் எமோஷன். இந்தப் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்துள்ளது என்பது போன்ற எமோஷனை நான் சொல்லவில்லை, இது எனது குடும்பம். எனது காட் ஃபாதர் யார் என்றால் அது தியாகராஜன் சார்தான். அவர் மீது நான் அதிக அன்பு வைத்திருக்கின்றேன்.

கிரஷ்: என்னைப்போன்ற 80களில் பிறந்தவர்களுக்கு நடிகர் பிரசாந்த் தான் முதல் கிரஷ். எங்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகன். கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் பிரசாந்துக்கும் இடையில் உருவான நட்பு என்பது மிகவும் மதிப்பு வாய்ந்தது. நான் அவரை நினைத்து மிகவும் பெருமைப் படுகின்றேன். பிரசாந்த் அவருடைய அப்பாவிடம் இருந்து கடின உழைப்பு, நேர்மை உள்ளிட்ட பல குணங்களைக் கற்றுள்ளார்.

Vanitha Vijayakumar Prasanth

பிரசாந்த் படம்னு தெரியாது: எனக்கு இப்படி ஒரு அப்பா இருந்தா போதும் (வனிதா இவ்வாறு பேசுகையில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார்). அதுதான் பிரசாந்த் அதுதான் தியாகராஜா சார். இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கு முக்கிய காரணம் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் படத்தில் பணியாற்றியுள்ள டெக்னீசியர்கள். என்னிடம் வந்து இந்த படம் தொடர்பாக கூறியபோது, எனக்கு இது பிரசாந்த் படம் எனத் தெரியாது. தெரிந்திருந்தால் கொஞ்சம் பணம் அதிகம் கேட்டுப் பெற்றிருப்பேன்.

மதிக்கத் தெரிகின்றது: ஆனால் எனக்கு நான் சூட்டிங்கில் கலந்து கொண்ட எல்லா நாட்களிலும் பணம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் டப்பிங்கிற்குப் போனேன், அப்போது இரட்டிப்பு பணத்தை தியாகராஜன் சார் கொடுத்தார். அவரிடம் பணம் உள்ளது என்பதால் அவர் கொடுக்கவில்லை. அவருக்கு கலைஞர்களை மதிக்கத்தெரிகின்றது, அவர்களின் திறமைகளுக்கு கௌரவம் செய்யத் தெரிகின்றது என்பதால்தான்.

Vanitha Vijayakumar Prasanth

புது போன்: நான் ஒருமுறை எனது போனைத் தொலைத்துவிட்டேன். அந்த நேரத்தில் அவர் எனக்கு போன் செய்தார். உடனே நான் அவரிடம்,'கொஞ்சம் பொறுங்கள் நான் எனது போனைத் தொலைத்துவிட்டேன்' எனக் கூறினேன். உடனே அவர் எங்கே இருக்கின்றாய் எனக் கேட்டார். எனக்கு ஐ போனில் 13 மேக்ஸ் ப்ரோ போனை வாங்கித் தந்தார். இதுபோல் யார் செய்வார்கள். யாருக்கு செய்யத் தோன்றும்" என பேசினார். நடிகை வனிதா விஜயகுமார் தனது தந்தை விஜயகுமாருடனான மனக்கசப்பு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X