நேரலையில் கதறி அழுத வனிதா ..தனக்கு யாருமே இல்லை என உருக்கமான பேச்சு!

சென்னை : மூன்றாவது திருமணத்திற்கு தயாராகும் வனிதா விஜயகுமார் சமீபத்தில் யூ ட்யூப் லைவில் பேசியுள்ளார். அவர் பேசிய பதிவுகள் தற்போது வைரலாக பரவிவருகிறது.

Recommended Video

அம்மா Vanitha Vijayakumar-ன் 3-வது Marriage-க்கு வாழ்த்துச்சொல்லும் மகள்

பிக் பாஸ் வனிதா திருமணம் குறித்து வெளிவந்த செய்திகளை தொடர்ந்து அதனை உண்மைதான் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் வனிதா.

வனிதாவின் மகளும் இந்த திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது அவர் பதிவிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

பிக் பாஸ் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவிய நிலையில் ,அந்த செய்திகள் உண்மைதான் என அவரும் அதிகாரபூர்வமாக செய்திகளை வெளியிட்டார் .இந்த திருமணத்தில் தனது மகள்களுக்கும் சம்மதம் என்று கூறிவந்த நிலையில் ,அவரது மகள் ஜோவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அம்மாவிற்கு வாழ்த்துக்கள் கூறி பதிவிட்டது தற்போது வைரலாக பரவிவருகிறது.

ரொம்ப வீக்

ரொம்ப வீக்

யூ டியூப் லைவில் பேசுவதற்காக நீண்ட நேரம் காத்து இருந்தும் யாரும் லைனில் வரவில்லை என்று கவலையுடன் இருந்த வனிதா,தனது மகளை அழைத்து சந்தேகம் கேட்டு உள்ளார்.பப்ளிக்கில் வைக்காமல் அன்லிஸ்டட்டில் வைத்து உள்ளீர்கள் என்று கூறி சரி செய்துவிட்டு அவரது மகள் சென்று இருக்கிறார். டெக்னிகல் எல்லாம் தனக்கு தெரியாது என்றும் ,ரொம்பவும் வீக் என்றும் அவர் கூறியுள்ளார்.

காதல்

காதல்

பீட்டர் பால் வனிதாவை சந்தித்து ஒரு படத்திற்கான கதையை கூறியுள்ளார் , அதுவும் அவருக்கு அதில் நெகடிவ் ரோல் என்றும் குறிப்பிட்டு உள்ளளார் .பல யோசனைகளுக்கு பிறகு நடிக்கவும் ஒப்புக்கொண்டார் வனிதா. பிறகு வனிதா ஒரு யூ ட்யூப் சேனல் தொடங்கி அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாரும் இல்லை

யாரும் இல்லை

வனிதாவின் திருமணத்திற்கு மகள்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர் ,அவர்கள் கூறியதாவது ,உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை தேவை ,நாங்கள் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால் நீங்கள் தனிமையில் இருப்பீர்கள் என்று அவர் கூறி இருக்கிறார் .அப்போது தான் யோசித்தேன் எனக்கு என்று யாரும் இல்லை,பெற்றோரும் இல்லை,குடும்பமும் இல்லை என்று கண்ணீர் விட்டு பேசியுள்ளார் .

கல்யாண நாள்

கல்யாண நாள்

இந்த தேதியை தேர்வு செய்வதற்கு ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார் .ஜூன் 27 தான் என் அம்மா அப்பாவின் திருமண நாள் ,அதே நாளில் நானும் திருமணம் செய்தால் அவர்களது ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் ,இவரின் நினைவுகள் அவர்களுக்கு வரும் என்றும் அவர் கண்ணீர் மல்க குறிப்பிட்டு இருக்கிறார். பெற்றோர் திருமண நாள் அன்றுதனக்கும் திருமணம் நடக்க இருப்பதை தெரிவித்த வனிதா மிகவும் சந்தோஷ தருணம் என்றும் ,40 வயதிற்கு மேல் அனைவர்க்கும் ஒரு துணை தேவை என்பதை உணர்த்து இந்த முடிவை எடுத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X