வேட்டைக்கு ரெடியான வனிதா விஜயகுமார்.. பிக்பாஸ் போட்டியாளர்களை எப்படியெல்லாம் வெளுத்து வாங்க போறாரோ!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பங்கேற்ற அவர், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பாதியிலேயே வெளியேறினார்.

இதனிடையே தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்கவுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சீரியல் நடிகைகள் ரச்சிதா, ஆயிஷா உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். 4 குழுக்களாக பிரிந்து பல்வேறு டாஸ்க்குகளையும் நிறைவேற்றி வருகின்றனர்.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், தற்போது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இந்த நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ரசிகர்களை கவரும் வகையில், பல விஷயங்களை இந்த நிகச்சிழ்யின் போட்டியாளர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்

இதனிடையே இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளரும் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் தற்போது இந்தப் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 11.30 மணிக்கும் அவர் பிக்பாஸ் லைவ் சாட்டில் பேசவுள்ளார்.

அடாவடி நடவடிக்கைகள்

அடாவடி நடவடிக்கைகள்

முன்னதாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பாதியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார், தன்னுடைய அடாவடியான நடவடிக்கைகளால் அனைவரின் வெறுப்புக்கும் ஆளானார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, கமல்ஹாசன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு அதிரடி கிளப்பினார்.

பாதியில் வெளியேறிய வனிதா

பாதியில் வெளியேறிய வனிதா

தொடர்ந்து தன்னால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்றும் கூறி, பிக்பாசிடமிருந்து அனுமதி பெற்று பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து இந்த நிகழ்ச்சிகள் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் கொடுத்த பிரபலத்தால் அதிகமான படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

லைவ் சாட்டில் வனிதா

லைவ் சாட்டில் வனிதா

தன்னுடைய அடாவடி நடவடிக்கைகள், திருமணங்களால் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார் வனிதா விஜயகுமார். தொடர்ந்து படங்களில் நடித்துவரும் இவர், தற்போது மீண்டும் பிக்பாஸ் லைவ் சாட்டில் இன்றைய தினம் ரசிகர்களுடன் பேசவுள்ளார். இதில் என்ன மாதிரியான விஷயங்களை இவர் கிளப்புவார் என்று தற்போதே ரசிகர்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X