Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்.. கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா!
சென்னை: நடிகை வனிதா தனது காதலரான பீட்டர் பாலை இன்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
Recommended Video
சினிமா குடும்பத்தை சேர்ந்த நடிகை வனிதா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.
பின்னர் பருவ வயதில் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் அந்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை.
சாக
விரும்பவில்லை..
கழுத்தில்
தூக்கு
கயிறுடன்
நீதி
கேட்கும்
சுஷாந்த்..
நெஞ்சைப்
பிழியும்
ஓவியம்!

இரண்டு திருமணங்கள்
இதனை தொடர்ந்து 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா அவருடன் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளை பெற்றார். பின்னர் அவரை விவாகரத்து செய்த வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்தார்.

நடன இயக்குநர்
அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்ற வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து நடன இயக்குநர் ராபர்ட்டுன் டேட்டிங்கில் இருந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அடிக்கடி செய்திகள்
மூத்த மகன் ஸ்ரீஹரி தனது அப்பாவுடன் வசித்து வர இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார் நடிகை வனிதா. குடும்பத்தாருடன் ஏற்படும் தகராறு காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வரும் வனிதா, கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

திருமண பத்திரிக்கை
இதனை தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வின்னரானார். தொடர்ந்து யூட்யூப் சேனல் தொடங்கினார் வனிதா. அண்மையில் அவரது திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது.

மூன்றாவது திருமணம்
இதனை தொடர்ந்து தனக்கு திருமணம் நடைபெறவுள்ளது உண்மைதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வனிதா. வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு 40 வயதில் மூன்றாவது திருமணம் தேவையா என சில விமர்சனங்கள் எழுந்தாலும் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஏஞ்சல் போல்..
இந்நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே வனிதா பீட்டர் பால் திருமணம் இன்று எளிமையாக நடந்து முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்துள்ளார் வனிதா. வெள்ளை நிற திருமண உடையில் ஏஞ்சல் போன்று உள்ளார் வனிதா. அதோபோல் பீட்டர் பாலும் கோட் சூட்டில் அசத்தலாய் உள்ளார்.

உதட்டோடு உதடு முத்தம்
நண்பர்கள் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் வனிதா - பீட்டர் பாலின் திருமணம் இன்று முடிந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளனர். வனிதா தனது பெற்றோரான விஜயக்குமார் - மஞ்சுளா திருமண நாளிலேயே தனது மூன்றாவது திருமணத்தை செய்து கொண்டுள்ளார்.