கரன்சி மாலையில் கணவருடன் வனிதா அக்கா.. காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது.. ஏன்னு பாருங்க மக்களே!
சென்னை: நடிகை வனிதா கரன்சி மாலையில் கணவருடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.
நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
தன்னுடைய யூ டியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்ததை தொடர்ந்து, லாக்டவுன் நேரத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவி பிரச்சனை
ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவி மற்றும பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளும் உள்ளனர். பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், அவரது இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனது கணவர் தனக்கு வேண்டும் என முறையிட்டார்.

மூன்று மாதங்களுக்கும் மேல்
இதனால் பேசு பொருளானது வனிதாவின் மூன்றாவது திருமணம். வனிதாவின் திருமணம், அது தொடர்பான சர்ச்சைகளால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாய் இருந்தது வனிதாவின் திருமணம்.

காஸ்ட்லி பூஜை
தற்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில் வீட்டில் ஒரு காஸ்ட்லி பூஜையை நடத்தி மீண்டும் ஹாட் டாப்பிக் ஆகியிருக்கிறார் வனிதா. அதாவது, நடிகை வனிதா, வீட்டில் லட்சுமி குபேரன் பூஜை நடத்தியுள்ளார்.

கழுத்தில் கரன்சி மாலை
கணவர் பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் இந்த பூஜையை நடத்தியுள்ளார் வனிதா. அந்த பூஜையில் நடிகை வனிதாவும் அவரது கணவர் பீட்டர் பாலும் கழுத்தில் கரன்சி மாலையுடன் பங்கேற்ற போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா.

அதிசயம் தான்..
மேலும் அந்த போட்டோவுக்கு, " வீட்டில் லட்சுமி குபேரன் பூஜை... 2020 ஆம் ஆண்டில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது ஒரு அதிசயம் தான்.. கடவுளால் மட்டும்தான் அதைச் செய்ய முடியும்.. அவருக்கு ஒரு திட்டம் உள்ளது, நான் அதனுடன் கண்மூடித்தனமாகப் போகிறேன்...

மறக்க முடியாத வருடம்
என் நம்பிக்கையும் நற்குணமும் என்னையும் என் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும். ஒருபோதும் மறக்க முடியாத ஒரு வருடம்.. நமக்கு வாழ்க்கையையும் கடவுளின் சக்தியையும் கற்று கொடுத்துள்ளது.. இவ்வாறு நடிகை வனிதா டிவிட்டியுள்ளார்.

ஐசியுவில் பீட்டர் பால்
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பீட்டர் பால் திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஐசியுவின் இருந்து 2 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார் பீட்டர் பால்.
Recommended Video

கடவுளின் கணக்கு
அப்போதே கடவுள் எல்லாவற்றையும் ஒரு கணக்கோடுதான் செய்கிறார் என்றார் வனிதா. இந்நிலையில் தனது கணவரை தனக்கு மீட்டு தந்தமைக்காகவும் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி வருமானம் அதிகரிக்கவும் லட்சுமி குபேரன் பூஜையை நடத்தி முடித்துள்ளார் நடிகை வனிதா.


Click it and Unblock the Notifications











