2 விவாகரத்து.. வயதுக்கு வந்த மகள்.. மூன்றாவது திருமணம் செய்யும் நடிகை வனிதா.. அவரே ஒப்புக்கொண்டார்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு திருமணம் நடக்கவுள்ளது உண்மைதான் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா. ரிக்ஷா மாமா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் வனிதா.
தொடர்ந்து படங்களில் நடிக்காவிட்டாலும் அடிக்கடி திருமணம், விவாகரத்து, குடும்பத்துடன் சொத்துப்பிரச்சனை என அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்தார். நடிகை வனிதா இதுவரை 2 திருமணங்கள் மற்றும் ஒரு காதல் உறவில் இருந்துள்ளார்.

முதல் திருமணம்
ஆனால் அந்த உறவுகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. வனிதா கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்ற நடிகரை தனது 19 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் கணவர் ஆகாஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

இரண்டாவது திருமணம்
பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை அதே ஆண்டிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஜெயந்திகா என்ற மகளை பெற்றுக்கொண்டார். ஆனால் இந்தத் திருமணமும் அடுத்த மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கணவர் ஆனந்த் ராஜனை 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் வனிதா.

ராபர்ட்டுடன் காதல்
அதன் பின்னர் நடன இயக்குநரான ராபர்ட்டை காதலித்தார் வனிதா. அவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். இருவரும் சேர்ந்து படம் கூட தயாரித்தனர். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்தார் வனிதா. இதனை தொடர்ந்து தனது அப்பாவான நடிகர் விஜயகுமார் அண்ணனான நடிகர் அருண்விஜய் என குடும்பத்துடன் சொத்து தகராறில் ஈடுபட்டார்.

பிக்பாஸ் சீசன் 3
இந்த விவகாரம் போலீஸ் கோர்ட் என சென்ற குடும்ப சண்டை சந்தி சிரித்தது. தற்போது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் வனிதா. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்மூலம் பெரும் பிரபலமானார். சண்டை மூட்டி விடுவது கொளுத்தி போடுவது என பிக்பாஸ் வீட்டையே ரணகளப்படுத்தினார் வனிதா.

சாஃப்ட் கார்னர்
இதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஏராளமான வசவுகளை வாங்கினார். ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது அவர் பேசிய உருக்கமான பேச்சு அவர் மீது மக்கள் மத்தியில் சாஃப்ட் கார்னர் ஏற்படச் செய்தது. தனது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக உருக்கமாக கூறினார் வனிதா.

வயதுக்கு வந்த மகள்
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மகள் வயதுக்கு வந்த போது கூட அந்த விழாவில் குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது தனியாக யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

திருமண பத்திரிகை
அதில் தனது சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முழுக்க வனிதாவுக்கு கல்யாணம் என ஒரு திருமண பத்திரிகை வைரலானது. அதில் மணமகன் பெயர் பீட்டர் பால் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது உண்மைதானா என கேட்டு குழம்பி வந்தனர்.

மூன்றாவது திருமணம்
இந்நிலையில் இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமார், தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளது உண்மைதான் என கூறியுள்ளார். பீட்டர் பாலை வரும் 27ஆம் தேதி திருமணம் செய்கிறார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டிலேயே திருமணம்
மேலும் லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெறவுள்ளது. வனிதா திருமணம் செய்யவுள்ள பீட்டர் பால் ஒரு விஷ்வல் எஃபெக்ட் டைரக்டர் என்றும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பணி புரிந்திருக்கிறார் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











