Vanitha Vijayakumar: சுருட்டு பிடிக்கும் வனிதா விஜயகுமார்.. சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படங்கள்!
சென்னை: நடிகை வனிதா விஜய்குமார் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பல்வேறு சர்ச்சைகளுடனேயே வாழ்ந்துவரும் வனிதா விஜய்குமாருக்கு அவரது குடும்பத்தினரும் சப்போர்ட் செய்வதில்லை. அவரது அம்மாவின் இறப்பிற்கு பிறகு குடும்பத்தினருடன் இணையாமல் உள்ளார்.
பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கொடுத்த பிரபலத்தையடுத்து தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது கேரக்டர்கள் அனைத்தும் போல்டாக அமைந்துள்ளன.

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வனிதா விஜயகுமாரின் சுருட்டு பிடிக்கும் புகைப்படங்கள்: நடிகை வனிதா விஜயகுமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்தவர். தமிழில் முதல் படத்திலேயே விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மாணிக்கம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். எப்போதும் சர்ச்சைகளுடனேயே வாழ்ந்து வருகிறார் வனிதா விஜயகுமார். இவருக்கு இவரது குடும்பத்தினரும் சப்போர்ட் செய்வதில்லை. ஆனாலும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை போல்டாக செய்து பழக்கப்பட்டவராக உள்ளார் வனிதா.
தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று திருமணங்களை செய்துக் கொண்டுள்ள வனிதா விஜயகுமார், இதற்காக அதிகமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இவர்கள் மூவரையும் விவாகரத்து செய்துள்ள வனிதா, இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனக்கு வேண்டுமென்றால் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார். தற்போது தன்னுடைய மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
விஜய் டிவியின் அடுத்தடுத்த ஷோக்களில் பங்கேற்று அதிரடி காட்டி வருகிறார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, ரசிகர்களின் வெறுப்பையே முதலில் சந்தித்தார். தொடர்ந்து தன்னுடைய வெளிப்படையான அதிரடி பேச்சுக்களால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று டைட்டிலை வெற்றிக் கொண்டார். விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளதுடன் சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளன. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் தற்போது நடித்து வருகிறார். தற்போது கடைசி தோட்டா என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் வனிதா விஜயகுமார். அதன் BTS புகைப்படங்களை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மர்டர் மிஸ்டரி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் வனிதாவிற்கு மிகவும் முக்கியமான கேரக்டராம். அந்தவகையில் சமீபத்தில் இவர் சுருட்டு பிடிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களில் மூக்கால் புகைவிட்டுக் கொண்டு வனிதா புகைப்பிடிப்பதாக காணப்படுகிறது.
இதையடுத்து தம்மு, சுருட்டு எல்லாம் ரொம்பவே பழக்கம்தான் போல என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வரும் இந்த புகைப்படங்களில் ஸ்டைலான உடையில் ஷார்ட் தலைமுடியுடன் காணப்படுகிறார் வனிதா விஜயகுமார். அவருக்கே உரிய அந்த அலட்சியமான லுக், இந்தப் புகைப்படங்களிலும் காணப்படுகின்றன. மேலும் காவல் அதிகாரி என்பதால் இடுப்பில் துப்பாக்கியுடன் மிரட்டுகிறார் வனிதா.


Click it and Unblock the Notifications











