வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நான் உங்களை மிஸ் பண்றேன்.. அம்மா குறித்து நடிகை வனிதா உருக்கம்!

சென்னை: தனது தாய் குறித்து நடிகை வனிதா உருக்கமாக பதிவிட்டுள்ள டிவிட் வைரலாகி வருகிறது.

Recommended Video

Vanitha Vijaykumar-கும் Power Star-கும் என்ன உறவு? | Power Star விளக்கம் | Filmibeat Tamil

நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் நடிகை வனிதா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் வனிதா.

இதேபோல் மாணிக்கம், சந்திரலேகா உள்ளிட்ட சில படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை வனிதா.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

பின்னர் திருமணம், குழந்தைகள், குடும்பம் என செட்டிலான வனிதா பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா.

பிக்பாஸ் ஜோடிகள்

பிக்பாஸ் ஜோடிகள்

அதன் பிறகு சினிமா வாய்ப்புகளும் சின்னத்திரை நிகழ்ச்சிக்கான வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அண்மையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா.

நிகழ்ச்சியில்

நிகழ்ச்சியில்

இதில் ரம்யா கிருஷ்ணனுடன் மோதல் ஏற்பட நிகழ்ச்சியில் இருந்து விலகினார் வனிதா. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை வனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

நடிகை வனிதா உருக்கம்

நடிகை வனிதா உருக்கம்

அந்த வகையில் தற்போது தனது அம்மாவான மறைந்த நடிகை மஞ்சுளாவின் போட்டோவை ரீடிவிட் செய்துள்ள நடிகை வனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது, உங்களால் முடிந்ததை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள், கொடுக்கத் தெரிந்திருக்கிறீர்கள்.. நீங்கள் எல்லாவற்றின் மூலமும் என்னுடன் இருக்க முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள்..

மிஸ் பண்றேன்

மிஸ் பண்றேன்

நான் ஒவ்வொரு நொடியும் உங்களை மிஸ் செய்கிறேன்.. நீங்கள் என் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில் என்னுடன் இருந்திருக்க முடியும் என்று நான் விரும்புகிறேன்.. ஆனால் நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிவேன்.. இவ்வாறு நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு மரணம்

2013ஆம் ஆண்டு மரணம்

பழம்பெரும் நடிகையான மஞ்சுளா 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை மஞ்சுளா 2013ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மரணமடைந்தார். அவரது நினைவு நாளை முன்னிட்டு நடிகை வனிதா அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X