திருமண விஷயத்தில் வனிதா விஜயகுமாருக்கு மகள்களின் அட்வைஸ்.. என்ன இப்படி சொல்லியிருக்காங்க!

சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு அதிரடியான பர்பார்மென்ஸ் கொடுத்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்ற வனிதா விஜயகுமார், அதிலிருந்து இடையிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சிகள் கொடுத்த புகழை அடுத்து தற்போது அம்மணிக்கு ஏராளமான படங்கள் வரிசைக்கட்டியுள்ளன.

நடிகை வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார் எப்போதுமே அதிரடி செயல்பாடுகளுக்கு பெயர் போனவர். தன்னுடைய குடும்பமே தன்னை ஒதுக்கி வைத்த போதிலும் அசராமல் தன்னுடைய வாழ்க்கை வாழ்ந்துக் காட்டி வருபவர். மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்த நிலையில், அந்த திருமணமும் சில மாதங்கள்கூட நிலைக்கவிலலை. தற்போது தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வனிதா

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வனிதா

விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இரண்டிலுமே பெஸ்டை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதிலிருந்து திடீரென அதிரடியாக வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்கள் எதுவும் சரியாக இல்லை என்று இதற்கு வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்திருந்தார்.

தன்னந்தனியான போராட்டம்

தன்னந்தனியான போராட்டம்

தன்னுடைய குடும்பத்தினரே தன்னை ஒதுக்கி வைத்த போதிலும் தன்னந்தனியாக இருந்து தன்னுடைய வாழ்க்கையின் முடிவுகளை அதிரடியாக எடுத்து அவரது குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார் வனிதா விஜயகுமார். விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் கொடுத்த புகழால் தற்போது அதிகமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் வனிதா.

மகள்களின் அட்வைஸ்

மகள்களின் அட்வைஸ்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட வனிதா விஜயகுமாரிடம் அவரது மகள்கள் அட்வைஸ் கொடுத்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வனிதா, தினந்தோறும் வீட்டில் இதுதான் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாத நிலையில், தன்னுடைய மகள்கள் ஆண்கள் எல்லாம் வேஸ்ட் என்றும் பேசாமல் வனிதா, ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

சந்திரலேகா என்ற தன்னுடைய முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். தொடர்ந்து ராஜ்கிரண் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ள வனிதா, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கொடுத்துள்ள புகழையடுத்து, தமிழ், கன்னடத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தனியாக பொட்டிக் ஷாப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X