என்னோட தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன்.. எல்லாமே இவர்தான் போட்டோ போட்டு சொன்ன வனிதா!

சென்னை: நடிகை வனிதா தன்னுடைய வாழ்க்கையே இவர்தான் என பதிவிட்டு ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவர், அவ்வப்போது குடும்பத் தகராறு காரணமாக செய்திகளில் அடிபட்டு வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் அண்மையில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா.

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

இந்த நிகழ்ச்சியின் மூலம் எதிர்பாராத அளவுக்கு பிரபலமானார். இதனை தொடர்ந்து அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் ஆகாஷ்

நடிகர் ஆகாஷ்

கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ், சமுத்திரம், தாமிரபரணி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

விவாகரத்து

விவாகரத்து

ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் விஜய் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

குடும்பத்தினர் ஆதரவு

குடும்பத்தினர் ஆதரவு

அதனை தொடர்ந்து மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னுடன் அனுப்புமாறு வழக்கு தொடர்ந்தார் வனிதா. ஆனால் வனிதாவின் குடும்பத்தினர் ஆகாஷ்க்கு ஆதரவாகவே நின்றனர்.

பெரும் தகராறு

பெரும் தகராறு

மகன் விஜய் ஸ்ரீஹரி அவரது தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் கண்காணிப்பில் வளர்ந்தார். இதனால் குடும்பத்தினருடன் பெரும் தகராறில் ஈடுபட்டார் வனிதா.

மீண்டும் விவாகரத்து

மீண்டும் விவாகரத்து


இதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ராஜன் ஆனந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

அதுவும் நீடிக்கவில்லை

அதுவும் நீடிக்கவில்லை

இதைத்தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் இணைந்து படம் கூட தயாரித்தனர். ஆனால் அதுவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

காவல்நிலையத்தில்

காவல்நிலையத்தில்

பின்னர் சொத்தில் பங்கு கேட்டும் பெரும் பிரச்சனை செய்தார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்தார் வனிதா.

மகன் மீது பாசம்

மகன் மீது பாசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மகன் விஜய் ஸ்ரீஹரி தன்னுடன் இல்லை என்று வருத்தப்பட்டார் வனிதா. என்றாவது ஒரு நாள் நிச்சயம் தனது மகன் தன்னை தேடி வருவார் என்று நம்பிக்கையுடனும் பேசி வந்தார்.

எனக்கு எல்லாமே..

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது மகனின் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் வனிதா. அதில் என்னுடைய தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன் எல்லாமே என்னுடைய வாழ்க்கையே என்னுடைய விஜய் ஸ்ரீஹரி என்னுடைய அப்பாவை போலவே இருக்கிறார் அல்லவா என்று பதிவிட்டுள்ளார் வனிதா.

இவ்வளவு பெரிய மகனா?

இவ்வளவு பெரிய மகனா?

அந்த போட்டோவில் வனிதாவின் மகன், தாடி மீசை என இளைஞராக உள்ளார். விஜய்ஸ்ரீஹரியின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வனிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேட்டு வருகின்றனர்.

விரைவில் வருவார்

வனிதாவின் இந்த போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள், விஜய் ஸ்ரீஹரி உங்களிடம் விரைவில் வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X