ராஜமாதா சிவகாமி தேவியாக வனிதா.. பாகுபலிக்கு வந்த சோதனை என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ராஜமாதா சிவகாமி தேவி கெட்டப்பில் வனிதா விஜயக்குமார் ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர்.

வனிதா விஜயக்குமார் கடந்த சில நாட்களாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக அவரது மூன்றாவது திருமணமும் அதனை ஒட்டி எழுந்த சர்ச்சைகளும் பெரும் பரபரப்பை கிளப்பியது.

அவரது திருமணம் குறித்து பேசியவர்களை எல்லாம் சரமாரியாக விளாசி தள்ளினார் வனிதா. நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் என பலரையும் விளாசினார்.

செல்பிக்கள்

செல்பிக்கள்

சமூக வலைதளங்களிலும் பலரையும் விளாசி கருத்துக்களை பதிவிட்டு வந்தார். தொடர்ந்து தனது புதிய கணவர் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த செல்பிக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வந்தார்.

பல போட்டோக்கள்

பல போட்டோக்கள்

இந்நிலையில் தற்போது ஃபுல் மேக்கப்பில் வேறு வேறு கெட்டப்புகளில் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
அதில் விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த பல போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் வனிதா.

ராஜமாத சிவகாமி தேவி

ராஜமாத சிவகாமி தேவி

அந்த வகையில் தற்போது ராஜமாதா சிவகாமி தேவி கெட்டப்பில் சிவப்பு நிற சேலையில் கலக்கப்போவது யாரு செட்டில் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு ராஜமாதா சிவகாமி தேவி என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இது என்ன சோதனை?

இது என்ன சோதனை?

இதனை பார்த்து செம காண்டாகியுள்ளனர் நெட்டிசன்கள். இது என்ன பாகுபலிக்கு வந்த சோதனை என்றும் சிவகாமி தேவிக்கு வந்த சோதனை என்றும் ஆதங்கப்பட்டுள்ளனர். பலர் இது அந்த சிவனுக்கே அடுக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

சந்திரமுகி போல்

சந்திரமுகி போல்

சில நெட்டிசன்கள் இந்த போட்டோவை பார்த்ததுமே சிரித்துவிட்டேன் என்றும் கமெண்ட்ஸ் ஆஃப் பண்ண மறந்துட்டீங்களே பீட்டர் தேவி என்றும் கிண்டலடித்துள்ளனர். இது சிவகாமி தேவி போன்று இல்லை என்றும் மாறாக சந்திமுகி போன்று உள்ளது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

என்ன கன்றாவி இது?

என்ன கன்றாவி இது?

கட்டப்பா என்ன கன்றாவி இது என்றும் கேவலமாக உள்ளது என்றும் வாய்க்கு வந்தப்படி கலாய்த்துள்ளனர். நடிகை வனிதா விஜயக்குமார் முதலில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X