அவைலபிளா? என்ன பொம்பளம்மா நீ.. விளாசிய நெட்டிசன்.. உன் வேலைய பாரு என வெளுத்து வாங்கிய வனிதா!
சென்னை: தனது திருமண ஸ்டேட்டஸ் குறித்து அவைளப்பிள் என பதிவிட்ட வனிதாவை நெட்டிசன்கள் விளாசி தள்ளியுள்ளனர்.
Recommended Video
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, திருமணம், விவாகரத்து, குடும்பத்துடன் சொத்துப் பிரச்சனை என அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.
இதுவரை மூன்று திருமணம் செய்துள்ள வனிதா மூன்று கணவர்களையும் பிரிந்து இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். 40 வயதாகும் நடிகை வனிதா, சின்னத்திரை, வெள்ளித்திரை என பிஸியாக இருந்து வருகிறார்.

படங்களில் ஒப்பந்தம்
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனல் காற்று என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடமாடும் நகைக்கடை ஹரி நாடாரின் 2கே அழகானது காதல் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா.

பீட்டரை பிரிந்த வனிதா
இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்திலும் நடிகை வனிதா நடிக்க உள்ளார். கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வனிதா அடுத்த 4 மாதங்களுக்குள்ளேயே அவரை பிரிந்தார்.

அவைளப்பிள்தான்
இந்நிலையில் வனிதா வட மாநிலத்தை சேர்ந்த பைலட் ஒருவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இதனை மறுத்த வனிதா வதந்திகளை நம்பாதீர்கள், நான் இன்னும் சிங்கிள்தான் அவைளப்பிள்தான் என்றும் கூறி டிவிட்டியிருந்தார்.

திட்டும் நெட்டிசன்ஸ்
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிங்கிள் என்று சொன்னால் போதாதா? அது என்ன அவைளப்பிள் என்று கேட்டு திட்டி தீர்த்தனர். பலரும் விளம்பரமா என்று கேட்டும் விளாசி தள்ளினர்.

என்ன பொம்பளை?
அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் வனிதாவை திட்டியிருந்தார். அதாவது, என்னது அவைளப்பிளா.. என்ன பொம்பளை.. உங்களோடு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.. அந்த பெண்களின் நன்மைக்காக இதையெல்லாம் நிறுத்துங்கள்.. அருவருப்பாக உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு தெரியும்
இதனை பார்த்து கடுப்பான வனிதா பதிலுக்கு அந்த நெட்டிசனை வெளுத்து வாங்கியுள்ளார். அவர் பதிலுக்கு பதிவிட்டிருப்பதாவது, சீரியஸ்லி.. நாமெல்லாம் வளர்ந்துவிட்டோம்.. நம்முடைய வாழ்க்கையை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் நம்முடைய பொறுப்பு என்ன என்பது நமக்கு தெரியும்.

புடிச்சா பாருங்க
எனக்கு தேவைப்படும் போது நீங்களா வந்து என்னை காப்பாற்ற போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். நான் ஒரு நடிகை, என்னோட பர்ஃபாமன்ஸ் பிடித்தால் நீங்கள் பார்க்கலாம்.. அவ்வளவுதான்.. இவ்வாறு காட்டமாக பதிலளித்துள்ளார் வனிதா.


Click it and Unblock the Notifications











