வெட்கமே இல்லையா.. இதுக்கு சாப்பிடாம இருக்கலாம்.. பிரபல தயாரிப்பாளரை கண்டப்படி விளாசிய வனிதா!

சென்னை: தனது மூன்றாவது திருமணம் குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளரை நடிகை வனிதா விஜயக்குமார் சரமாரியாக விளாசியுள்ளார்.

நடிகை வனிதா கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். லிப் லாக், கட்டிப்பிடி என களைக்கட்டியது அவரது மூன்றாவது திருமணம்.

வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் அவரது திருமணம் பெரும் சர்ச்சையானது.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தன்னை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பால் மீது புகார் அளித்தார். இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையானது.

பிரபலங்கள் விமர்சனம்

பிரபலங்கள் விமர்சனம்

அவரது திருமணம் குறித்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் விமர்சிக்க, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி என திரை பிரபலங்களும் ஒரு பக்கம் விமர்சித்தனர். தன்னுடைய திருமணத்தை பற்றி பேச அவர்கள் யார் என்று கடுமையாக சாடினார் வனிதா விஜயகுமார்.

சட்டப்படி நடைபெறவில்லை

சட்டப்படி நடைபெறவில்லை

இதனால் இருவரும் தாங்கள் பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வனிதாவின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் வனிதாவின் திருமணம் சட்டப்படி நடைபெறவில்லை, எந்த சட்டமுறையும் பின்பற்றப்படவில்லை என்று கூறியிருந்தார்.

விளாசிய வனிதா

விளாசிய வனிதா

மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், மீடியா உதவியை நாடியிருப்பதால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். இதனை பார்த்த நடிகை வனிதா விஜயக்குமார், தயாரிப்பாளர் ரவீந்திரனை சரமாரியாக விளாசியுள்ளார்.

வனிதா எச்சரிக்கை

வனிதா எச்சரிக்கை

ரவீந்திரனுக்கு ஆடியோ மெஸேஜ் அனுப்பியுள்ள வனிதா. அதில் தனக்கு கால் செய்து பேசுங்கள் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளார். அதற்கு இன்று சன்டே நான் நாளை பேசுகிறேன். எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

படமெடுத்து பிரபலமாகுங்கள்

படமெடுத்து பிரபலமாகுங்கள்

மேலும் வனிதா வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியதற்கு டெக்ஸ்ட்டாக கூல் ரிப்ளை செய்துள்ளார் ரவீந்திரன். தனது திருமணம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேளுங்கள் என்றும் படமெடுத்து பிரபலமாக பாருங்கள், என்னைப் பற்றி பேசி பிரபலமாகாதீர்கள் என்றும் சாடியுள்ளார்.

வெட்கமே இல்லை

வெட்கமே இல்லை

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கடுப்பான வனிதா, இப்படி என்னை வைத்து பப்பிளிசிட்டி வாங்குவதற்கு நீங்கள் சாப்பிடாமல் இருக்கலாம், குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இருக்கலாம் என சாடியிருக்கிறார். மேலும் தனது உங்களுக்கு வெட்கமே இல்லை என்றும் கடுமையாக சாடியிருக்கிறார் வனிதா.

Recommended Video

Vanitha விடம் மன்னிப்பு கேட்ட Lakshmi Ramakrishnan, Kutti Padmini
நாங்கள் விமர்சிக்கலாமா?

நாங்கள் விமர்சிக்கலாமா?

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவினைப் பற்றி பேசி பிரபலமானவர் தானே நீங்கள், உங்கள் பொண்டாட்டி மகளை பற்றி நாங்கள் விமர்சிக்கலாமா என இஷ்டத்திற்கு விளாசியிருக்கிறார். ஏற்கனவே லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குட்டி பத்மினியை விளாசிய நிலையில் தற்போது தயாரிப்பளர் ரவீந்திரனையும் வச்சு செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X