குளுகுளு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டே… தத்துவம் பேசும் பிக்பாஸ் நடிகை !
சென்னை : வெயிலுக்கு இதமாக குளுகுளுனு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டே தத்துவம் பேசி உள்ளார் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா, தினமும் ஒரு புகைப்படத்தை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது ஐஸ்கிரீமிடம் இவர் கூறி இருக்கும் தத்துவம் பல லைக்குகளை பெற்று வருகிறது.

மூத்த மகள்
பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

புகழ் பெற்றார்
தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சர்ச்சைகளில் சிக்கிய வனிதா கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
Recommended Video

யூடியூப் சேனல்
வனிதா விஜயகுமார், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் ஒரு திரைப்படத்திலும் நடித்தி வருகிறார்.

தவறை யூகித்தேன்
இந்நிலையில் வெயிலுக்கு இதமாக குளுகுளு ஐஸ்கிரீம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையே எனது வெற்றியின் ரகசியமாக நான் நம்புகிறேன். நான் செய்த தவறை யூகித்தேன். ஆனால் , தற்போது அவை சரியாகிவிட்டன என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











