அர்ஜூன் தாஸூக்கே வில்லி நான்.. அநீதி இசை வெளியீட்டு விழாவில் தெறிக்கவிட்ட வனிதா விஜயகுமார்!
சென்னை: அநீதி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் அர்ஜூன் தாசை பாராட்டி பேசினார்.
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில், அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் அநீதி.
அந்த படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்க, நாயகியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

அநீதி திரைப்படம்: வசந்த பாலன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்திற்கு தமிழில் அநீதி என்றும், தெலுங்கில் இப்படத்திற்கு 'பிளட் அண்டு சாக்லேட்'என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஜூலை 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வனிதா விஜயகுமார் பேச்சு: இந்நிலையில்,அநீதி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வனிதா விஜயகுமார், அநீதி படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறேன். இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை வசந்த பாலன் அவர்கள் எனக்கு கொடுத்து இருக்கிறார்கள் அதற்கு மிகவும் நன்றி.
அர்ஜூன் தாஸூக்கே வில்லி: வசந்த பாலன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பதை நினைத்து பெருமை அடைகிறேன். திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு வட கர்வம் கூட இல்லை. அனைவர் இடத்திலும் எளிமையாகவே அவர் பழகுகிறார். மேலும், இந்த படத்தில் அர்ஜூன் தாஸூக்கே வில்லி நான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் க்யூட்டெஸ்ட் பெர்சன். அவரோட வாய்ஸ் அழகாக உள்ளது.
தமிழ் சினிமாவின் ஷாருக்கான்: தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம், நான் இதை ஜோக்கிற்காக சொல்லவில்லை, 'அநீதி படம் திரையில் பார்க்கும் போது நீங்கள் இதைத்தான் உணர்வீர்கள். துஷாரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். அநீதி திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன் என்றார். அநீதி திரைப்படம் வரும் ஜூலை 21ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











