மகளை நினைச்சா பெருமையா இருக்கு.. மேடையில் நெகிழ்ந்து போன வனிதா விஜயகுமார்!
சென்னை: இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள முற்றிலும் மாறுபட்ட திரைப்படமான டீன்ஸ் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய வனிதா விஜயகுமார், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய என் மகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார். இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுயடைய வாழ்த்துக்கள் என்றார்.
குழந்தைகளை மையமாகக் வைத்து சாகச திரில்லர் திரைப்படம் தான் டீன்ஸ். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுவிழா சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு, மீண்டும் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.

பெருமையா இருக்கு: இந்த நிகழ்ச்சியில் பேசிய வனிதா விஜயகுமார், எவ்வளவோ ஆடியோ ரிலீசுக்கு போய் இருக்கிறேன் இருந்தாலும், இந்த இசைவெளியீட்டு விழா ரொம்ப முக்கியமான ஒன்று. என் மகள் ஜோவிகா இந்த படத்தில் நடித்து இருந்தால் கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் இருந்து இருக்காது. நான் முதன் முதலில் பி வாசு அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தேன். இதைத் தொடர்ந்து, காக்கை சிறகினிலே படத்தில் பார்த்திபன் சாருடன் வேலை செய்தேன். இப்போ என் மகள் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார் என்பது எனக்கு பெருமையாக இருக்கு.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்: நடிப்பு என்பதை தாண்டி ஒரு தொழில்நுட்ப கலைஞராவது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதுவும் பார்த்திபன் சாரின் பள்ளியில் என்பதால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். டீன்ஸ் படத்தின் டிரைலர் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது இது கட்டாயமா திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் என்பது புரிகிறது. இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுயடைய வாழ்த்துக்கள் என்றார். இந்த விழாவில் இயக்குநர்கள் பாக்யராஜ், கே.எஸ் ரவிக்குமார், பேரரசு, இசையமைப்பாளர் டி இமான், வனிதா விஜயகுமார், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











