ஹாலிவுட் நாயகியாக மாறிய வனிதா விஜயகுமார் .. என்ன மேடம்.. ஒரேயடியா இப்படி மாறிட்டீங்க!

சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் ஒரேயடியாக ஹாலிவுட் நாயகியைப் போல அதிரிபுதிரி போஸ் கொடுத்து இணையத்தில் தீயை பற்றவைத்துள்ளார்.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சர்ச்சைகளில் சிக்கிய வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சக போட்டியாளர்களிடம் அடாவடியாக பேசிய வனிதாவுக்கு சோஷியல் மீடியாவில் ஆரம்பத்தில் பல நெகடிவ் கமெண்டுகள் வந்ததால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதாவை ஏராளமான இல்லத்தரசிகளுக்கு பிடித்துப்போனது.

சொந்தமாக யூடியூப் சேனல்

சொந்தமாக யூடியூப் சேனல்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், வனிதா விஜயகுமார், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சினை தினம் ரிவ்யூ செய்துவந்தார்.

இதில், அரசியல்வாதியான விக்ரமனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் ஆதரவு அளித்தது மட்டுமில்லாமல், விக்ரமனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வோம் என்று வெளிப்படையாகவே திருமாவளவன் ட்வீட் போட்டிருந்தார். இதைப்பார்த்த, வனிதா, ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக மதிப்புக்குறிய ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரும் சிட்டிங் எம்பியுமான திருமாவளவன் இப்படி வாக்கு சேகரிக்கலாம் என கேள்வி எழுப்பி இருந்தார்.இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

பல்வேறு திரைப்படத்திலும் பிஸியாக நடித்தி வரும் வனிதா, அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சொந்தமாக துணி கடை மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார்.

ஹாலிவுட் நாயகி போல

ஹாலிவுட் நாயகி போல

ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக இருக்கும் வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ஹாலிவுட் கதாநாயகிக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் கிளி பச்சை நிற உடையில், ஹாலிவுட் நடிகை போல கலர் செய்த முடியுடன் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகள் ஏய் எப்புர்ரா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவுசெய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X