காதலின் அடையாளம்.. இன்றைய காதலர்.. வருங்கால கணவர்.. பீட்டர் பாலின் பெயரை பச்சைக்குத்திய நடிகை வனிதா!

சென்னை: தனது காதலரான பீட்டர் பாலின் பெயரை நடிகை வனிதா விஜயக்குமார் டாட்டூ வரைந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

அம்மா Vanitha Vijayakumar-ன் 3-வது Marriage-க்கு வாழ்த்துச்சொல்லும் மகள்

நடிகை வனிதா விஜயக்குமார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். தனது பதினைந்தாவது வயதில் ஹீரோயினாக நடித்தார்.

அவரது படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

விவாகரத்து

விவாகரத்து

ஆனால் அதிலும் சோபிக்க முடியாமல் போனது வனிதாவால். இரண்டு திருமணங்களை செய்த அவர் இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்தார். இதில் முதல் கணவரின் மூலம் ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகளை பெற்றார். இரண்டாவது கணவரின் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றார்.

இரண்டு பெண் குழந்தைகள்

இரண்டு பெண் குழந்தைகள்

முதல் கணவருக்கு பிறந்த மகனுக்கு 19 வயதாகிறது. ஸ்ரீஹரி என்ற பெயர் கொண்ட அவர், தற்போது தனது தந்தையுடன் வசித்து வருகிறார். பிறந்த வீட்டுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.

வனிதாவின் பெயர்

வனிதாவின் பெயர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை காதலிப்பதாக கூறினார். இருவரும் ஒன்றாக சேர்ந்து படம் ஒன்றை தயாரித்தனர். இருவரும் சேர்ந்து பல செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினர். வனிதாவின் பெயரை ராபர்ட் பச்சையெல்லாம் குத்தினார். ஆனால் அந்த காதல் திருமணத்திற்கு முன்பாகவே முறிந்தது.

பிக்பாஸ் மூலம் பிரபலம்

பிக்பாஸ் மூலம் பிரபலம்

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. பிக்பாஸ் வீட்டுக்குள் கொளுத்திப் போட்டு தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளானார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

தற்போது யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நடிகை வனிதா பீட்டர் பால் என்ற விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை வரும் 27 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். தான் யூட்யூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த நண்பர் பீட்டர் பாலுக்கும் தனக்கும் காதல் மலர்ந்ததால், திருமணம் செய்ய முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

மகள் உருக்கம்

மகள் உருக்கம்

வனிதாவின் இந்த மூன்றாவது திருமணத்திற்கு அவரது மகள்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது மகள் ஜோவிக்கா தனது தாயின் திருமணத்திற்கு உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

கைகளில் டாட்டூ

கைகளில் டாட்டூ

இந்நிலையில் நடிகை வனிதாவும், அவரது காதலரான பீட்டர் பாலும் தங்களின் கைகளில் இருவரின் பெயர்களையும் மாற்றி மாற்றி பச்சைக்குத்தியுள்ளனர். அதனை போட்டோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

கைகளை ஒன்றாக சேர்த்து..

கைகளை ஒன்றாக சேர்த்து..

அதில் பீட்டர் பாலின் கையில் வனிதா என்றும், வனிதாவின் கையில் பீட்டர் பால் என்றும் டாட்டூ வரைந்துள்ளனர். இருவரும் தங்களின் கைகளை ஒன்றாக சேர்த்தப்படி போட்டோ எடுத்துள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா.

வனிதாவுக்கு வாழ்த்து

வனிதாவுக்கு வாழ்த்து

மேலும் அந்த போட்டோவுக்கு காதலுக்காக வரையப்பட்டது என கேப்ஷன் கொடுத்துள்ளார். வனிதா மற்றும் பீட்டர் பாலின் இந்த டாட்டூ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X