கர்மா மிகவும் மோசமானது..ட்விட் போட்டு ரவீந்தரை பழிதீர்த்த வனிதா விஜயகுமார்!
சென்னை : சோஷியல் மீடியாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது ரவீந்தர், மகாலட்சுமியின் திருமணம் பற்றிய செய்தி தான். தற்போது வனிதா அவர்களின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் போட்டு ரவீந்தரை பழிதீர்த்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன், சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். ஒரு சில திரைப்படங்களை விநியோகமும் செய்து இருக்கிறார்.
இவர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை பார்த்த 90ஸ் கிட்டுகள் சோகத்தில் மூழ்கி பலவிதமான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

ரவீந்தர், மகாலட்சுமி
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திடீர் திருமணத்தால் எழுந்த சர்ச்சை குறித்து ஊடகம் ஒன்றுக்கு இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அதில், நாங்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தோம் இதனால் இது திடீர் திருமணம் இல்லை, நிதானமாக யோசித்து நடந்த திருமணம் என்றார். அதே போல, மகாலட்சுமி என்னை எந்த கட்டாயத்தின் பேரிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார்.

நீங்கள் இப்படி செய்யலாமா?
மேலும், வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு இப்போது நீங்கள் இரண்டாவதாக திருமணம் செய்யலாமா என பல கேள்விகள் எழுகின்றன. வனிதா அக்கா கதை வேறு, எங்கள் கதை, வனிதா, பீட்டர் பாலை திருமணம் செய்யும் போது, அவருக்கு விவாகரத்து ஆகாவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் மனைவி பிரச்சனையை கிளப்பினார்.

வனிதாவை விமர்சித்தேன்
இதனால், அடுத்தவரின் கணவரை மணப்பது தவறு என்றேன். மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவியின் குழந்தைகளுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்து, வனிதாவை கடுமையாக விமர்சித்தேன். பின்னாளில் எல்லாம் சரியாகி விட்டது. எங்களுக்கு திருமணமானது வனிதாவுக்கு இன்னும் தெரியாது என்று நினைக்கிறேன் தெரிந்தால் நிச்சயம் வாழ்த்தி இருப்பார் என்று கூறியிருந்தார்.

கர்மா மிகவும் மோசமானது
இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்தவர்களின் வாழ்க்கை பற்றி கவனிக்க நேரம் இல்லாத அளவுக்கு சந்தோஷமாக பிசியாக இருக்கிறேன். கர்மா மிகவும் மோசமானது..எப்படி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவளுக்கு தெரியும். நான் அவளை முழுவதுமாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். வனிதாவின் ட்விட்டரை பார்த்தவர்கள் அவர் ரவீந்தரன்,மகாலட்சுமியை பற்றித்தான் ட்விட் போட்டுள்ளார் என்றும், ட்விட் போட்டு ரவீந்தரை பழிதீர்த்துக்கொண்டார் என்றும் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











